லியோ புக்கிங்.. சொல்லி வைத்தார் போல் 9 மணி காட்சியை திறக்காத தியேட்டர்கள்.. பின்னணி
சென்னை: சொல்லி வைத்தார் போல் லியோ திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிக்கான புக்கிங் சென்னையின் முக்கியமான எந்த திரையரங்கிலும் ஓபன் செய்யப்படவில்லை.. என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு வழக்கத்தை விட மிக அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு காரணம் விஜய் மட்டுமல்ல. இயக்குனர் லோகேஷ் கனராஜும் முக்கிய காரணம்.

ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாஸ்டர் திரைப்படத்தின் கேரக்டர்கள் வடிவமைப்பு அற்புதமாக இருக்கும். அதேபோல் விக்ரம் படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் தனியாக பிரித்து படமே எடுக்கலாம் என்கிற அளவிற்கு இருந்தது.
விஜய்க்கு மாஸ்டர் படத்திற்கு வந்த பீஸ்ட் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்தது. அதேநேரம் வாரிசு ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றது. வாரிசு படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பைவிட லியோ மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் உடன் சேர்ந்திருப்பதே காரணம்.
இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்தாலும், மொத்தமே 5 காட்சிகள் ஒரு திரைக்கு வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதுவும் முதல் காட்சி 9மணிக்குத்தான் வெளியிட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் லியோ படத்திற்கான புக்கிங் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஓபன் செய்யப்பட்டுள்ளது. வெகுசீக்கிரமாகவே 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை புக்கிங் முடிந்துவிட்டது. அதேநேரம் காலை 9 மணி காட்சிக்கான முன்பதிவினை சொல்லிவைத்தார் போல் முக்கிய திரையரங்குகள் ஓபன் செய்யவில்லை.

உயர்நீதிமன்றம் நாளை காலை தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கிறது. அதன்பிறகே காலை 4 மணி காட்சி இருக்கிறதா அல்லது அல்லது 7 மணிக்கு முதல் காட்சியா அல்லது அரசு அறிவித்தபடி 9மணிக்குத் தான் காட்சியா என்பது தெரியவரும். இதன் காரணமாகவே பிரபல திரையரங்குகள் காலை 9 மணி காட்சியை ஓபன் செய்யாமல் இருக்கின்றன.
இது ஒருபுறம் எனில் அதிக இருக்கைகள் வைத்துள்ள பல திரையரங்குகளில் லியோ புக்கிங் இன்னமும் ஓபன் ஆகவில்லை. காரணம், தயாரிப்பு நிறுவனம்மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பர்சன்டேஜ் விசயத்தில் இன்னமும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லையாம். தயாரிப்பு நிறுவனம் முதல் வார கலெக்சனில் அதிக சதவீதம் கேட்பதால் இழுபறி நீடிக்கிறதாம். இதனால் திட்டமிட்டபடி லியோ 19ம் தேதி வெளியாகுமா என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் .












Click it and Unblock the Notifications