லியோ வெற்றி விழா: அண்ணன் வராரு! ரெடியா நண்பாஸ்? யாருக்கெல்லாம் அனுமதி? விஜய் மக்கள் இயக்கம் தகவல்
சென்னை: லியோ வெற்றி விழாவிற்கு வரும் ரசிகர்கள் பாஸுடன் ஆதார் அட்டையையும் அவசியம் கொண்டு வர வேண்டும் என ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 1 ஆம் தேதி நாளை மாலை 6 மணிக்கு லியோ வெற்றி விழா ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் லியோ வெற்றி விழாவில் கலந்து கொள்வோர் நுழைவு சீட்டுடன் (பாஸ்) ஆதார் அட்டை அவசியம் என ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது. பாஸுடன் ரசிகர் மன்ற அடையாள அட்டையும் நகலெடுத்து கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் காவல் துறை சார்பில் நுழைவு சீட்டு இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நுழைவு சீட்டு இல்லாதோர் தேவையின்றி விழா நடைபெறும் இடத்திற்கு வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த வேண்டாம். நாளை மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த விழாவிற்கு மாலை 4 மணி முதல் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என காவல் துறை தெரிவித்துள்ளது.
பின்னணி என்ன: லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா வரும் நவம்பர் 1-ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடத்த படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பெரியமேடு காவல் நிலையத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியது. நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பும் கேட்கப்பட்டது.
இந்த நிலையில் காவல் துறை படத்தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இந்த கடிதத்திற்கு காவல் துறை பதில் கடிதம் நேற்று அனுப்பியது. அதில் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன, காவல் துறை பாதுகாப்பு இல்லாமல் தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?
முக்கிய விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள்? விழாவுக்கு 5000 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என காவல் துறை கேள்விகளை எழுப்பி சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்த நிலையில் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது. முறையான அனுமதி கடிதங்களுடன் விண்ணப்பித்ததால் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன.
காவல் துறை 6000 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது. பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகளும் விஐபிகளுக்கு 500 இருக்கைகளும் ஒதுக்கிக் கொள்ளலாம். அரங்கின் மைய பகுதியில் தேவைப்பட்டால் இருக்கைகளை அமைத்துக் கொள்ளலாம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் வைப்புத் தொகையாக ரூ 10 லட்சம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications