Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இமைக்கும் நேரத்தில் பெண்ணின் கழுத்தை கவ்விய சிறுத்தை.. அங்கே தான் அதிசயம்.. அந்த மிராக்கிள் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஷிரூர் காசர் தாலுகாவில் நடந்த இந்த சம்பவம், அப்படியே சினிமா பார்ப்பதுபோல பரபரப்பு நிறைந்ததாகவும், அதே சமயம் மிரளவைக்கும் ஆச்சரியத்தையும் தந்து கொண்டிருக்கிறது.. நடந்தது எல்லாம் கனவா? நனவா? என்று தெரியாமல் கதிகலங்கி போய் கிடக்கிறார்கள் கொல்வாடி கிராம மக்கள்.. என்ன நடந்தது என்று சுருக்கமாக இங்கே பார்க்கலாம்...!!

கொல்வாடி கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பெண்மணி மங்கர்ணா சிவராம் நெட்கே.. கடந்த புதன்கிழமை மதியம் திருப்பூர் ஷிவார் பகுதியில் உள்ள தன்னுடைய விவசாய நிலத்தில் வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தார்.

வயல்வெளியில் ஒரு அதிசயம்

அந்த விவசாய பகுதியானது, மலைகள் சூழ்ந்து காணப்படும்.. அன்றைய தினம் காலையிலேயே சிறுத்தையின் உறுமல் சத்தம் அந்த பக்கம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டனர்.,.. ஆனாலும் ஒருநாள் விவசாய வேலைக்கு போகாவிட்டாலும் குடும்பமே பட்டினி கிடக்குமே என்று வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்திற்குச் சென்றுள்ளார் மங்கர்ணா.. வழக்கம்போல் நிலத்தில் குனிந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், புதர்களுக்குள் பதுங்கியிருந்த ஒரு ஆக்ரோஷமான சிறுத்தை, மின்னல் வேகத்தில் மங்கர்ணா மீது பாய்ந்தது. பொதுவாகவே காட்டில் வேட்டையாடும் சிறுத்தைகள், தனது இரையைக் கொல்ல அதன் கழுத்து பகுதியைத்தான் குறிவைக்கும். மங்கர்ணாவின் விஷயத்திலும் அதுதான் நடந்தது.

அந்த சிறுத்தை தன்னுடைய கூர்மையான பற்களால் அவரது கழுத்தை அப்படியே கவ்விப் பிடித்தது. ஒரு நொடியில் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்த நேரத்தில், அங்குதான் ஒரு அதிசயம் நடந்தது...

கழுத்தை சுற்றியிருந்த கேடயம்

அதாவது அன்றைய தினம் கடுமையான குளிர் இருந்ததாம்.. அந்த குளிரில் இருந்தும், நிலத்தில் கிளம்பும் தூசியிலிருந்தும் தப்பிக்க மங்கர்ணா தன்னுடைய கழுத்தைச் சுற்றி ஒரு கனமான, தடிமனான ஸ்கார்ஃப் எனப்படும் சால்வையை சுற்றி கட்டியிருந்தார். அந்த சாதாரண துணிதான் அன்று எமனிடமிருந்து அவரை காப்பாற்றும் கேடயமாக மாறியது.

சிறுத்தை முழு பலத்துடன் அவரது கழுத்தைக் கடித்தபோது, அதன் கோரைப்பற்கள் மங்கர்ணாவின் சதையைத் துளைப்பதற்கு பதிலாக, அவர் அணிந்திருந்த தடிமனான துணியில் சிக்கிக் கொண்டன. துணி குறுக்கே இருந்ததால் சிறுத்தையினால் ஆழமாக கடிக்க முடியவில்லை.

மரண பயத்தில் உறைந்துவிடாமல், மங்கர்ணா தனது முழு பலத்தையும் திரட்டி உதவி கோரி உரக்கச் சத்தமிட்டார். ஒரு பக்கம் சிறுத்தையின் பிடி, மறுபக்கம் உயிருக்குப் போராடும் துணிச்சல் என அந்த இடமே உச்சக்கட்ட பதற்றத்துக்கு போனது..

தெறித்து ஓடிய சிறுத்தை

மங்கர்ணாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்து நிலங்களில் வேலை செய்த விவசாயிகள் கையில் கிடைத்த கட்டை மற்றும் ஆயுதங்களுடன் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.

கூட்டமாக மக்கள் திரண்டு வருவதையும், அவர்களின் கூச்சலையும் கண்ட சிறுத்தை, மங்கர்ணாவை விட்டுவிட்டு அருகில் இருந்த புதர்களுக்குள் ஓடி மறைந்தது. சிறுத்தையின் நகங்கள் பட்டதில் மங்கர்ணாவின் உடலில் சில காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உடனடியாக அவர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக பீட் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் காயங்களில் இருந்து மீண்டு நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்..

கிராமத்தில் ஒரு மிராக்கிள்

இந்தச் சம்பவம்தான் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... விஷயத்தை கேள்விப்பட்டு வனத்துறை அதிகாரிகள், அந்த கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தச் சிறுத்தை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்கவும், அதைப் பிடிக்கக் கூண்டு வைக்கவும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல பாதிக்கப்பட்ட மங்கர்ணாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய நிதியுதவி வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் சுற்றியிருந்த ஒரு சாதாரண துணி, ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றியிருப்பது நிஜமாகவே மிராக்கிள்தான்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+