குழந்தைகளுக்கான பிபிஎஃப் கணக்கில் பணம் போட்டால் இத்தனை நன்மைகளா.. மிஸ் செய்யாதீங்க!
சென்னை: குழந்தைகள் எதிர்காலத்தில் பணத்திற்காக கஷ்டப்படக் கூடாது என பெற்றோர் நினைப்பதில் தவறில்லை. அதற்கான அருமையான திட்டம்தான் PPF எனும் திட்டமாகும்.
பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்பார்கள். அது போல் பணம் இன்று முக்கியமானதாக மாறிவிட்டது. மனதை பார்க்காமல் பணத்தை பார்ப்போர்தான் அதிகம் இருக்கிறார்கள்.

இதனால் யாராக இருந்தாலும் வருங்காலத்திற்கு கையில் பணம் இருந்தால்தான் இறந்தால் நம்மை எடுத்து அடக்கம் செய்வார்கள். இதனால்தான் உடலில் தெம்பு இருக்கும் போதே ஓடி ஓட சம்பாதிக்கிறார்கள். நாம் சம்பாதிக்கும் போது நமது குழந்தைகள் பிற்காலத்தில் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு நிரந்தர வைப்புத் தொகையில் ஏதாவது ஒரு தொகையையும் போட்டு வைக்கிறார்கள்.
அந்த வகையில் குழந்தைகளுக்கு நல்லதொரு பொருளாதார அடித்தளத்தை வழங்கக் கூடிய பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்கை திறப்பது முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. PPF என்பது நல்ல ரிட்டன் ரேட்டுகள், இன்ன பிற சலுகைகள் அங்கிய அரசு ஆதரிக்கும் ஒரு சேமிப்பு திட்டமாகும். PPFகள் அரசால் தொடங்கப்பட்டதால் இதில் பணத்திற்கு பாதுகாப்பு உள்ளது.
பிரச்சினை இல்லாத முதலீடாகும். தனியார் நிறுவனங்களில் போட்டு வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கணக்கை ஏன் திறக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். லாக் இன் பீரியடின் போது அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாது.
பிபிஎஃப் கணக்கு 15 ஆண்டு கால லாக் இன் பீரியட்டை கொண்டுள்ளது. உங்கள் குழந்தை 18 வயதை அடையும் போதுதான் அந்த கணக்கை நீங்கள் நீட்டிக்க விரும்புகிறீர்களா இல்லை மூட விரும்புகிறீர்களா என்பதை முடிவு செய்து கொள்ளலாம். குழந்தையாக இருக்கும் போதே உங்கள் பிள்ளைக்கு பிபிஎஃப் கணக்கை நீங்கள் திறந்துவிடுங்கள்.
அப்போதுதான் அவர்கள் வளர்ந்த பிறகு லாக் இன் பீரியட்டில் பிரச்சினையே இருக்காது. அவர்களுக்கு பணத்தேவை வரும் போது எடுத்துக் கொள்ளலாம். இதை போஸ்ட் ஆபிஸிலோ அல்லது வங்கியிலோ திறந்து கொள்ளலாம். ஒரு ஆண்டிற்கு ரூ 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் வருமான வரித் தாக்கல் செய்யும் போது இதன் மூலம் சில வரிச் சலுகைகளை பெறலாம்.
அதே போல் பிபிஎஃப்பின் மூலம் கிடைக்கும் பணத்திற்கும் வரி செலுத்த தேவையில்லை. இந்த பிபிஎஃப் வங்கிக் கணக்கில் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் கூட்டு வட்டி முறையில் வழங்கப்படும். இந்த கணக்கு தொடங்கிய 7ஆவது ஆண்டு பாதி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இத்தனை பலன்கள் இருக்கும் போது நாம் ஏன் குழந்தைகளுக்கு இந்த கணக்கை திறந்து பணத்தை போடக் கூடாது?
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications