"மிதக்கும் நகரம், ஹோட்டல், ஏர்போர்ட்".. உலக அளவில் கடலில் உள்ள கட்டுமானங்கள் என்னென்ன?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் பேனா சின்னம் வைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர், பாஜக மற்றும் அதிமுகவினர் எதிர்க்கிறார்கள். சரி உலகில் கடலுக்குள் எங்கேயுமே கட்டுமானங்கள் இருக்கின்றன, உலக அளவில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பல கட்டுமானங்கள் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
உலகின் மிக முக்கியமான விமான நிலையம் அமைந்துள்ள நகரம் என்றால் அது துபாய் தான். உலகின் பல்வேறு கோடீஸ்வரர்கள் முதலீடு செய்துள்ள இந்த துபாய் நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டுமானங்கள் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகின்றன.
இங்கே செயற்கையாக கடலுக்குள் பாம் ஜூமேரா என்ற செயற்கை நகரம் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் பத்து மீட்டர் ஆழத்திற்கு மணல் கொட்டப்பட்டு அந்தப் பகுதிகளை மேடாக்கி தீவுக் கூட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் பணக்காரர்கள் பலருக்கும் இங்கே வீடுகள் இருக்கிறது. அம்பானிக்கு கூட இங்கு வீடு இருப்பதாக சொல்லப்படுகிறது.

துபாய் செயற்கை தீவு
சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த தீவை பார்த்தால் பெரிய பேரீட்சை மரம் இருப்பதைப் போன்ற வடிவில் இருக்கும். அதனால் தான் இந்தத் தீவுக்கு பேரிட்சை என்பதை குறிக்கும பாம் என பெயரிட்டுள்ளார்கள். எப்படி அமைக்கப்பட்டுள்ளது பாம் ஜூமேரா தீவு. இது கரையில் இருந்து கடலுக்கு ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை அமைத்து கட்டடங்கள் இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக நான்காயிரம் வீடுகளும், ஒரு மிகப்பெரிய ரிசார்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. 2001-ல் வேலையைத் தொடங்கி 2009 இல் முடித்து இருக்கிறார்கள். அப்போதே மக்களும் குடியேறி வசித்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் இடமாக இந்த பாம் ஜுமேரா செயற்கை தீவு உள்ளது.

கன்சாய் விமான நிலையம்
ஜப்பான் நாடு சர்வதேச விமான நிலையத்தை கடலில் அமைத்துள்ளது. அங்குள்ள கன்சாய் விமான நிலையம் உலகிலேயே கடலில் அமைக்கப்பட்ட முதல் விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றி கல் மற்றும் மணலை நிரப்பக் கூடிய கட்டுமானப் பணிகள் 1987ஆம் ஆண்டு நடந்துள்ளது. இதற்காக மூன்று மலைக் குன்றுகளைத் தகர்த்து கல்லை எடுத்து வந்து அமைத்துள்ளது ஜப்பான். சுமார் 4.5 கிலோ மீட்டர் நீளமும், 2.5 கிலோ மீட்டர் அகலமும் கொண்டதாக உருவானது இந்த விமான நிலையம். பணிகள் முடிந்து 1994 இல் விமான நிலையம் திறக்கப்பட்டது.

சுவீடன் சுரங்கம்!
சுவீடனுக்கும் டென்மார்க்குக்கும் நடுவில் கடல் இருக்கும் நிலையில், கடலுக்கு நடுவே ஒரு பாலத்தையும் சுரங்கத்தையும் அமைத்து இரண்டு நாடுகளும் இணைந்துள்ளன. சுவீடனும் டென்மார்க்கும் பெபரகாம் பகுதியில் தங்களது எல்லைகளைப் பிரித்து உள்ளனர். அதே நேரத்தில் இரு தரப்பு வணிக நோக்கத்திற்காக அந்தப் பகுதியில் கடல் வழி போக்குவரத்து இருந்து வந்தது. பெரும் கப்பல்கள் அடிக்கடி போய் விட்டு வந்ததினால் படகு போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக பாலம் வழியாக இரண்டு எல்லையையும் இணைக்க விரும்பின இருநாடுகளும்.
நீண்ட ஆய்வுக்கு பின்னர் ஒரு பகுதியை பாலமாகவும். மறுபகுதியை சுரங்கமாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டது., இரண்டு பகுதியையும் செயற்கை தீவு அமைத்து இணைக்கலாம் அப்படி என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் செயற்கைத் தீவு அமைத்து சுரங்கத்தைக் கொண்டு வந்தால் கப்பல் போக்குவரத்து தடைபடாது என்று திட்டமிட்டு உருவானதுதான் பெபரகாம்.

துபாய் ஹோட்டல்
துபாயில் கடலில் ஒரு செயற்கைத் தீவு உருவாக்கப்பட்டு குர்ஜல் ஹாரோ என்ற ஹோட்டல் கட்டப்பட்டிருக்கிறது. துபாயைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் நிறுவனம். வித்தியாசமான வடிவமைப்பில் ஒரு ஹோட்டலைக் கட்டவேண்டும் என்று முடிவு செய்தது. அதற்கென்று ஆர்டிக்டெத் என்பவரை அணுகியது, அவர் தான் சுமேரா கடற்பகுதியில் உள்ள செயற்கைத் தீவில் ஈபிள் டவர் போலவும், சிட்டி போலவும் உருவாக்கியுள்ளார்- துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இந்த ஹோட்டல் இருக்கிறது.

கடலில் தேவாலயம்!
தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடானா மோட்டோரினிக்கோவில் கொட்டோர் என்ற நகரில் கடலில் தேவாலயம் பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளது. பாறைகளை உடைத்து கடலில் வீசி திட்டாக மாற்றி அங்கு தேவாலயமும் அருங்காட்சியமும் கட்டப்பட்டுள்ளது. இப்போது மக்கள் பாலத்தின் வழியாகவும் படகு வழியாகவும் அந்த ஆலயத்திற்கும் அருங்காட்சியகத்துக்கும் போய் வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications