அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியல்.. "மடியில் கனமில்லை - வழியில் பயம் இல்லை" அமைச்சர் ரகுபதி
சென்னை: திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டால் வெளியிடட்டும்.. எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை வெளியிடும் பட்டியலை பார்ப்பதற்காக பெரிய திரையும் வைக்கப்படவுள்ளது.

அதில் முழு விவரமும் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர். நேரடி பத்திரிகையாளர் சந்திப்பு எதுவும் இல்லையென்றாலும் ஊழல் பட்டியலை வெளியிட்ட பிறகு பெரிய திரையில் அண்ணாமலையின் பேச்சு ஒளிபரப்பப் படும் என்று சொல்லப்படுகிறது. திமுகவினரை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலையின் இந்த பேச்சு காரசாரமாக இருக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில், அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியல் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரகுபதி கூறுகையில், " அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை . எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயம் இல்லை. பட்டியலை வெளியிட்டால் வெளியிடட்டும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் துணை வேந்தர் மசோதாக்கள் உள்பட 11 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது" என்றார்.
-
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications