சாணக்கியத்தனத்தை வென்ற சாமர்த்தியம், தே.மு.தி.க போனால் போகட்டும் - எடப்பாடி மாஸ்டர் ஸ்ட்ரோக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாக உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளிடையே சீட்டு பேச்சுவார்த்தை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இரண்டு பெரிய கட்சிகளும் அதிக இடங்களில் நிற்க வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சிகளிடம் மல்லுக்கட்டி வருகிறது.

இதில் முதல் முதலில் பா.ம.கவுடன் இடங்களை உறுதி செய்து பின்னர் முதல் வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து தேர்தல் ஓட்ட பந்தயத்தில் முந்திக் கொண்டுள்ளது அ.தி.மு.க.

பல்வேறு கட்ட பேரத்திற்கும் போராட்டத்திற்கும் பிறகு அதிருப்தியோடுதான் தி.மு.க கூட்டணியில் பிற கட்சிகளின் தொகுதி பங்கீடு பேசி முடிக்கப்பட்டது.

சிபிஎம் கோபம்

சிபிஎம் கோபம்

குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸில் மாநிலத் தலைவர் கண்ணீர்விட்ட பிறகுதான் வேறு வழியின்றி காங்கிரஸ்க்கு 25 சீட்டுகளை ஒதுக்கியது தி.மு.க. இதைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின்னரே சி.பி.ஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோருக்கு தொகுதி பங்கீட்டை முடித்தது தி.மு.க. அனைவருக்கும் தலா 6 இடங்கள் என்ற அடிப்படையில் தி.மு.க பேச்சு வார்த்தையில் முடிவுக்கு வந்தது சி.பி.எம்யை கோபத்தில் ஆழ்த்தியது.

புது புது கட்சிகள்

புது புது கட்சிகள்

பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் வேறு வழியின்றி சி.பி.எம்வுடன் 6 இடங்கள் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொண்ட நிலையில் திடீரென்று தி.மு.க லெட்டர் பேட் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியது, கூட்டணி கட்சிகளை கோபமடையச் செய்தது. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விரக்தியில் தி.மு.க பெயர் தெரியாத கட்சிகளுக்கு கூட சீட் ஒதுக்கியுள்ளதாக கூட்டணி கட்சியினரே விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாமக, பாஜக

பாமக, பாஜக

அதே சமயம், பா.ம.கவுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்து முதலில் கணக்கை தொடங்கிய அ.தி.மு.க பா.ஜ.கவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை சுமூகமாக நடத்தியது. தே.மு.தி.கவுடனான பேச்சு வார்த்தையில் முதலில் சில இழுபறிகள் நீடித்தாலும், தொடர்ந்து அதனை தக்க வைக்க அ.தி.மு.க முயன்றது, பிடிவாத நிலை காரணமாக தே.மு.தி.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தன்னிச்சையாக அறிவித்தது.

அதிமுக அதிக இடங்கள்

அதிமுக அதிக இடங்கள்

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க வெளியேறியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதுரிய வியூகமே என்றும் இதனால் அ.தி.மு.கவிற்கே அதிக சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க வெளியேறியதன் மூலம் அ.தி.மு.க போட்டியிட அதிக இடங்கள் கிடைத்துள்ளதாகவும் அதே சமயம் தே.மு.தி.க தற்போது கூட்டணிக்காக சிறிய கட்சிகளுடன் கையேந்தும் நிலையில் நிற்பதாகவும் இதுவே முதலமைச்சரின் தேர்தல் வியூகம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது 2011ஆம் ஆண்டு இல்லை என்று தே.மு.தி.கவிற்கு முதலமைச்சர் சாதுர்யமாக உணர்த்தியுள்ளார்.

சாதகமான சூழல்

சாதகமான சூழல்

"வழியை விடு காற்று வரட்டும்" என்ற ரீதியில் அ.தி.மு.க தற்போது தனது கூட்டணி கட்சிகளுடன் இன்னும் குஷியாக பேசி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி வியூகத்தால் ஏற்பட்ட தே.மு.தி.கவின் கூட்டணி வெளியேற்றம் அ.தி.மு.கவிற்கு தேர்தல் களத்தில் சாதகமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+