எங்களை வாழ விடுங்கள்.. பிரச்சனை என் மகனோடு போகட்டும்.. கருக்கா வினோத்தின் தாய் சாவித்ரி கண்ணீர்
சென்னை: சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் குறித்த விபரங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரிக்க தொடங்கி உள்ளதோடு, குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தான் கருக்கா வினோத்தின் தாய் சாவித்ரி கண்ணீர் மல்க உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தின் ஆளுநர் மாளிகை சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆளுநர் மாளிகையின் வாசலில் விழுந்த இந்த பெட்ரோல் குண்டு விழுந்தது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவரிடம் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. கருக்கா வினோத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்தும், அதனை செய்த கருக்கா வினோத் குறித்தும், அவரது பின்னணி விபரங்களை என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை சேகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது 21ம் தேதி அவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தபோது தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவருடன் வெளியே வரும் வீடியோ வெளியானதால் என்ஐஏ கருக்காக வினோத் குறித்த தகவல்களை சேகரிக்க தொடங்கி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க கருக்கா வினோத்தின் தாய், உறவினர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இன்று காலை முதல் கருக்கா வினோத்தின் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை எஸ்எம் நகரில் உள்ள கருக்கா வினோத்தின் தாய் சாவித்ரியிடம், சிறையில் இருந்து வந்தவுடன் அவர் யாரை சந்தித்தார்? என்பது உள்பட பல கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு சாவித்ரி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருக்கா வினோத் சிறையில் இருந்து வந்தவுடன் யாரை சந்தித்தான்? என போலீசார் கேட்டனர். மேலும் சிறையில் இருந்து வந்த அவன் தானாகவே ஜாமினில் வெளியே வந்ததாக என்னிடம் தெரிவித்தான். அதோடு சிறையில் இருந்தபோது ஏன் பார்க்க வரவில்லை. ஏன் ஜாமினில் எடுக்கவில்லை எனக்கேட்டு சண்டையிட்டான். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் என்பது என் மகனோடு போகட்டும். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என அவர் கண்ணீர் மல்க கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications