ஜீரோ இப்போ ஹீரோ ஆனேன்.. ஐபிஎல் மூலம் அடிமட்டத்தில் இருந்து வந்து கோடிகளில் புரளும் இந்திய வீரர்கள்
சென்னை: ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 2 வது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும், இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்து மக்கள் மத்தியில் ஹீரோக்களாக உயர்ந்து நிற்கும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி பார்ப்போம்.

நடராஜன்: இப்படி ஒரு பட்டியலை எடுக்கும்போதே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தமிழ்நாட்டை சேர்ந்த நமது யார்க்கர் கிங் நடராஜனைதான். சேலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த நடராஜன் மிகவும் சாதாரணமான ஏழை குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாய் சாலையோரம் சிக்கன் பக்கோடா விற்று வந்தார். அவரது தந்தை தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
நமதூரில் உள்ள சாதாரண இளைஞர்களைபோல் டென்னிஸ் பந்தில் விளையாட தொடங்கிய நடராஜன், முறையான வழிகாட்டுதல்கள் பலரது உதவியால் கிரிக்கெட் பந்தில் கலக்கத் தொடங்கினார். இப்படி TNPL இல் விளையாட தகுதிபெற்ற நடராஜன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக பஞ்சாப் அணியில் சேவாகின் கவனத்தை ஈர்த்தார்.
அதன் விளைவாக 2017 ஆம் ஆண்டி ஐபிஎலில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஐதராபாத் அணியால் 4 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். இந்திய அணியில் விளையாட சில போட்டிகளிலேயே வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தனது திறமையை நிரூபித்துக் காட்டினார் நடராஜன்.

முஹம்மது சிராஜ்: ஐசிசியின் நம்பர் ஒன் ODI பந்துவீச்சாளர், ஐபிஎலின் தலைசிறந்த எகனாமிக் பவுலர், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளர் என்று இப்போது அழைக்கப்படும் ஐதராபாத்தை சேர்ந்த முஹம்மது சிராஜும் அவ்வளவு எளிதாக இந்த முன்னேற்றத்தை அடையவில்லை. ஆட்டோ ஓட்டுநரின் மகனான சிராஜ் 6க்கு 6 என்ற அளவுக் கொண்ட வீட்டில்தான் குடும்பத்தோடு வசித்து வந்தார்.
2017 ஆம் ஆண்டு ஐதராபாத் அணி அவரை 2.6 கோடிக்கு ஏலம் எடுத்தவுடன் அவரது வாழ்க்கை மாறியது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு சென்ற அவர் கோலியின் நம்பிக்கையை பெற்றார். ஆனால், தொடக்கத்தில் அவரது பந்துகளை பேட்ஸ்மேன்கள் பதம் பார்க்க கடும் விமர்சனத்துக்கு ஆளானார். ஆனால் தனது பந்துவீச்சை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிய அவர், இன்று முன்னேறி உள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ஸ்டாராக திகழ்வது இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜெஸ்வால்தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நேற்று வெறும் 13 பந்துகளில் 50 ரன்களை விளாசி உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையையே தன்வசம் ஈர்த்து உள்ளார்.
கடந்த போட்டியில் சதம், நேற்றைய போட்டியில் 98 என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் கதவை வேகமாக தட்டிக்கொண்டிருக்கும் ஜெய்வால் சாலையோரம் பானிபூரி வியாபாரம் செய்பவரின் மகன். தனது தந்தையுடன் சேர்ந்து மும்பை வீதிகளில் இவரும் பானி பூரி விற்று வந்த இவர், முறையான தங்கும் இடம் இல்லாமல் நடைபாதைகளில் எல்லாம் உறங்கி இருக்கிறார். ஆனால், இன்றோரு ஐபிஎல் மூலம் சம்பாதித்த பணத்தால் மும்பையில் சொந்த வீடி வாங்கி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்.

ரிங்கு சிங்: முரட்டு அடி என்பதற்கு உதாரணம் ஒன்றை காட்ட வேண்டும் என்றால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் பினிஷர் ரிங்கு சிங். கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்த ரிங்கு சிங்கின் தந்தை வீடு வீடாக கேஸ் சிலிங்டர் டெலிவரி செய்யும் தொழில் செய்து வந்தவர்.
ரிங்கு சிங்கும் அவரது குடும்பமும் அந்த கேஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு ஸ்டோர் ரூமில்தான் வசித்து வந்துள்ளனர். மாத வருமானம் வெறு 6 முதல் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால், 2018 ஆம் ஆண்டு அவர் ஐபிஎலில் 80 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்ட பிறகு வாழ்க்கையே மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications