எல்ஐசி நிறுவனமே கொடுத்த மிகப் பெரிய அலர்ட்.. பாலிசி எடுக்க போறீங்களா.. இதை பாருங்க
சென்னை: பாலிசி தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, பாலிசிதாரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எல்ஐசி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
புதிய ஜீவன் சாந்தி, நிவேஷ் பிளஸ் (திட்டம் எண். 849), இன்டெக்ஸ் பிளஸ் (திட்டம் எண். 873), SIIP (திட்டம் எண். 852), ஜீவன் உத்சவ் (திட்டம் எண். 871), ஜீவன் உமாங் (திட்டம் எண். 945), பீமா ஜோதி (திட்டம் எண். 860) உள்பட ஏராளமான திட்டங்கள் எல்ஐசியில் இருக்கிறது. எல்ஐசியில் முதலீடு செய்வோர், திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்த பின்னர் முடிவெடுக்க வேண்டும்.

அதேநேரம் எல்ஐசி தொடர்பாக சில நேரங்களில் தவறான செய்திகள் அடிக்கடி பரவி வருகின்றன. அந்த வகையில் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாற்றாக, விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறுவிதமாக பெறுவதற்கு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் உண்மை இல்லை என எல்ஐசி அறிவித்துள்ளது. மேலும் பாலிசி தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, பாலிசிதாரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எல்ஐசி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "எல்.ஐ.சி. பாலிசிதாரர்களின் பாலிசிகளை, எல்.ஐ.சி. நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாற்றாக, விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறுவிதமாக பெறுவதற்கு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சமீபத்திய செய்திக்கட்டுரைகள் வாயிலாக அறிகிறோம்.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு அத்தகைய நிறுவனங்களுடனோ அல்லது அத்தகைய நிறுவனங்களின் சேவைகளுடனோ எந்தவித தொடர்பு இல்லை. இதுதொடர்பாக, முன்னாள் எல்.ஐ.சி. அதிகாரிகள், ஊழியர்களின் அறிக்கை, அவர்களுடைய சொந்த கருத்துகள்தான். இதற்கு எல்.ஐ.சி. நிறுவனம் எந்தவித பொறுப்புகளையும் ஏற்காது. எல்.ஐ.சி. பாலிசிகள் விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் ஆகியவை காப்பீட்டு சட்டம் (1938)-ன்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது அமலில் உள்ள சட்டங்களின்படி, மேற்கண்டவாறு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை, அவை பாலிசிதாரர் நலன் சார்ந்தது அல்ல, பொது நலனுக்கு உகந்தது அல்ல, பாலிசிகளை வர்த்தகம் செய்யும் நோக்கிலானது ஆகிய காரணங்களுக்காக எல்.ஐ.சி. நிறுவனம் நிராகரிக்கலாம். எனவே, பாலிசிதாரர்கள் இதுதொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு, முழு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இதுதொடர்பான முடிவுகள், பாலிசியின் ஆயுள் காப்பீட்டு பலன்கள் மற்றும் பாலிசிதாரரின் நிதி பாதுகாப்பை பாதிக்கலாம். எந்த ஒரு முடிவை செயல்படுத்துவதற்கு முன்பு, எங்கள் கிளைகளில் உள்ள எல்.ஐ.சி. அதிகாரிகளுடன் தயவு செய்து கலந்தாலோசிக்க வேண்டும். எல்.ஜ.சி. நிறுவனம் வெளிப்படைத்தன்மை மற்றும் பாலிசிதாரர்களின் நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications