ஒருபக்கம் குளிர் வாட்டினாலும் 4 நாட்களுக்கு மழையும் இருக்காம் - மீனவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: இலங்கையை ஒட்டி உருவாகவுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 9ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினாலும் நவம்பர் மாதத்தில்தான் தீவிரமடைந்துள்ளது. இயல்பான அளவை விட 70 சதவிகிதம் அதிகமாக கொட்டித்தீர்த்தது. திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்குமே பெருவெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளம் வடியட்டும் மக்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விடட்டும் என்று டிசம்பர் மாதம் மழை சற்றே ஓய்வெடுத்தது. ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30ஆம் தேதி பெருமழை கொட்டியது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மட்டுமல்லது டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் எக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர்.

வறண்ட வானிலை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. இந்த நிலையில்
இன்றும் நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஜனவரி 8ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இடி மின்னலுடன் மழை
இலங்கையை ஒட்டி உருவாகவுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 9ஆம் தேதி தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் மழை
ஜனவரி 9ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், பெய்யக்கூடும். இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

மீனவர்களுக்கு அறிவிப்பு
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications