சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழை - சென்னை வானிலை வார்னிங் - வீடியோ

    சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் , "வங்ககடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.. வட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்ளாக பெரிய அளவில் மழை இல்லை.

    தென்மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 70 மில்லி மீட்டர் மழை நேற்று காலை நிலவரப்படி பெய்து இருந்தது.

    வெளுத்து வாங்கிய கனமழை.. இரண்டு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவெளுத்து வாங்கிய கனமழை.. இரண்டு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    மீன்பிடிக்க செல்லாதீர்

    மீன்பிடிக்க செல்லாதீர்

    இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தம் நிலை கொண்டிருப்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    கனமழை பெய்யும்

    கனமழை பெய்யும்

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்

    மிதமான மழைக்கு வாய்ப்பு

    மிதமான மழைக்கு வாய்ப்பு

    இதேபோல் தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கனமழைக்கு வாய்ப்பு

    கனமழைக்கு வாய்ப்பு

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் 29,30, 31 ஆகிய தேதிகளில் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Light to moderate rain is likely to occur at most places over south Tamil Nadu and at a few places over north Tamil Nadu, Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X