கலாம் பாணியில் திமுகவை சிக்கலில் தள்ளும் பாஜக.. சிபி ராதாகிருஷ்ணனை வைத்து மூவ்!
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்ற பழி திமுக மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சுமத்தி வருகின்றன. தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இதன் மூலமாகக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்ததன் மூலமாக திமுகவை பாஜக சிக்கலில் தள்ளி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதன்பின் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கின. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு பாஜக மிகமுக்கியமான வாய்ப்பை அளித்திருக்கிறது. இதன் மூலமாக திமுகவுக்கும் புதிய சிக்கல் ஒன்றை பாஜக ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் 2வது முறையாக பொறுப்பில் இருக்க விரும்பினார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பாக அப்துல் கலாமிற்கு ஆதரவு அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் தமிழரான அப்துல் கலாமிற்கு திமுக ஆதரவு அளிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கலாம் என்றாலே கலகம்தான் என்று பதில் அளித்தார். அதேபோல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரைத் தான் ஆதரிப்போம் என்றும் கூறி இருந்தார்.
இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தே அப்துல் கலாம் விலகினார். இதனால் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க திமுக ஆதரிக்கவில்லை என்ற பழியை இப்போதும் எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் செல்லும் போதெல்லாம் திமுக மீது இந்த விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் வைக்கப்படும்.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் சென்ற போது கூட இந்த விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழரான சிபி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்து, பாஜக மீண்டும் திமுகவுக்கு சிக்கலில் தள்ளி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா கூட்டணி சார்பாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், தமிழருக்கு கூட திமுக ஆதரவு அளிக்கவில்லை என்ற விமர்சனத்தை பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் முன் வைக்கும்.
இதனால் அப்துல் கலாம் பாணியை போலவே மீண்டும் திமுகவுக்கு பாஜக சிக்கலை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலமாக குடியரசு துணைத் தலைவர் தேரr்தலில் திமுகவுக்கு பாஜக செக் மேட் வைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுகவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications