ஜெயலலிதாவை போல் ஈபிஎஸ்.. பிரிவினை பற்றி பேசாதீங்க.. மாஜி அமைச்சர் மாபா பாண்டியராஜன் பரபர பேட்டி
சென்னை: ‛‛ஜெயலலிதாவை போல் எடப்பாடி பழனிச்சாமியை மிகுந்த எழுச்சியோடு கட்சி தொண்டர்கள் வரவேற்கின்றனர்.இந்த வேளையில் பிரிவினை பற்றி பேச வேண்டாம்'' என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஜூன் மாதம் பூதாகரமாக வெடித்தது. ஜூன் மாதம் மத்தியில் இந்த விவகாரம் வெளிப்படையாக தெரியவந்தது. எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.
இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து உள்கட்சி மோதல் வெடித்து நீதிமன்றங்களை நாட தொடங்கினர். இதற்கிடையே தான் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக அலுவலகத்துக்கு சீல்
மேலும் அன்றைய தினம் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. மாறாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து பிரச்சனையை கருத்தில் கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு
இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்க உத்தரவிட்டது. மேலும் ஒருமாதம் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே தான் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து இருநீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதன்மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் செல்லும் என்பது உறுதியானது.

72 நாளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி
பொதுக்குழு வழக்கு, அதிமுக தலைமை அலுவலகம் வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்ற நிலையில் 72 நாட்களுக்குப் பிறகு இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார். அவரது வருகையை ஒட்டி அதிமுக தலைமை அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.

மாபா பாண்டியராஜன் பேட்டி
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மிகுந்த எழுச்சியோடு கட்சி தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கின்றனர். கடந்த முறை பெங்களூரில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி வந்தபோது இருந்த எழுச்சியை இப்போது நான் பார்க்கிறேன். கட்சிக்கு இது நல்லகாலம். கட்சியில் அனைவரும் ஒன்றுப்பட்டு இருக்கக்கூடிய காலம் இது. இந்த வேளையில் பிரிவினை பற்றி பேசவேண்டாம்'' என கூறி சென்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications