Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று கிளாம்பாக்கம் போல் இன்று எழும்பூர்.. மின்சார ரயில் பிரச்சனையில் நேரடியாக இறங்கி திமுக சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது, கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து சேவைகள் மாற்றப்பட்டதால் மக்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அதனை பயன்படுத்திய அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரியாக பயன்படுத்தின. இப்போது அதே பாணியில் சென்னையில் மக்களை கடுமையாக பாதித்துள்ள மின்சார ரயில் பிரச்சனையில் நேரடியாக திமுக களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அடுத்தடுத்து அழுத்தம் தருகிறார்கள் திமுக எம்பிக்கள். தெற்கு ரயில்வே அலுவலகத்திற்கே சென்று திமுக எம்பி தயாநிதி மாறன் மனு அளித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது, ஆளும் திமுக அரசு கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டது. மொத்த மீடியாக்களும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அது சரியில்லை..இது சரியில்லை.. தண்ணீர் வரவில்லை.. சாப்பாடு கடைகள் இல்லை.. ஏடிஎம் இல்லை, பேருந்துகள் போதிய அளவில் இல்லை என்று கடுமையான கேள்விகளை எழுப்பின. அப்படி கேள்வி எழுப்பியதில்உண்மை இல்லாமல் இல்லை.. ஏனெனில் பேருந்து நிலையம்புதிதாக திறக்கப்பட்ட காரணத்தால், உடனே அனைத்து வசதிகளும் அங்கே வரவில்லை. படிப்படியாகவே வந்தன.

Like kilambakkam then Egmore today DMK MPs directly involved in the electric train issue

கிளாம்பாக்கம் பிரச்சனை

அதேபோல் மக்கள் பல கிலோ மீட்டர் பயணித்து கிளாம்பாக்கம் வந்து தான் ஏறவேண்டிய நிலை இருந்தது. புறநகர் பேருந்து சேவையிலும் உடனடியாக ஒருங்கிணைப்புகள் அப்போது செய்யப்படவில்லை.. பிரச்சனை வரவர, அதாவது சுட்டிக்காட்ட, சுட்டிக்காட்ட ஒவ்வொரு பிரச்சனையாக அரசு சரி செய்தது.

அப்படித்தான் கிளாம்பாக்கம் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் நடைமேம்பாலம் ஆகியவை அமைக்கப்பட்டு இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த பிரச்சனை வெடித்த போது, மக்களின் கடும் கோபத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரியான பயன்படுத்தின. அரசுக்கு அப்போது தலைவலியையும் கொடுத்தன.

மின்சார ரயில் சேவை பாதிப்பு

அந்த வகையில் இன்று சென்னை மின்சார ரயில் பிரச்சனையில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது திமுக எம்பிக்கள் அடுத்தடுத்து மத்திய அரசுக்க அழுத்தம் தருகிறார்கள். திமுக நிர்வாகிகளுமே சமூக வலைதளங்களில் மின்சாரயில் பிரச்சனையை கையில் எடுத்து கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதனால் ஒரு கட்டம் வரை மக்கள் பிரச்சனையாக மட்டுமே பார்த்த ரயில்வே, அரசியல் கட்சிகளும் கையில் எடுத்ததால், விளக்கம் அளிக்க தொடங்கி வருகிறது.

பிளஸ் 2 தேர்வு வரப்போகிறது

எனினும் பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகள் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், ரயிலில் பயணித்தே பலர் படிக்கிறார்கள்.. அவர்களையும், அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்களையும் நேரடியாகவே ரயில் சேவை குறைப்பு பாதிக்கும் என்பதால், இந்த பராமரிப்பு பணிகளை பாதிப்பு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக எம்பிக்களும், திமுக கூட்டணி எம்பிக்களும், சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறார்கள்.

திமுக எம்பிக்கள் குரல்

திமுக எம்பிக்கள் வில்சன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பதிவிட்டனர். இதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் கேள்வி எழுப்பி இருந்தார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசனும் கேள்வி எழுப்பினார். வெங்கடேசன் வெளியிட்ட பதிவில், ரூ. 2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன.

ஆனால் ரூ 734 கோடியில் புணரமைக்கபடும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு இரயில்வே.சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்க செய்திருக்கும் இந்த நிர்வாக கோழைத்தனத்திற்கு இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இப்படி அடுத்தடுத்து திமுக கூட்டணி எம்பிக்கள் ரயில்வேயை டேக் செய்து மின்சாரயில் பிரச்சனையில் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

தயாநிதி மாறன் மனு

இந்நிலையில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி எம்பியான தயாநிதி மாறன், தெற்கு ரயில்வே மண்டல அலுவலகத்திற்கே சென்று மின்சார ரயில் குறைப்பால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி மனு அளித்தார். கூடுதல் ரயில் சேவைகள் இயக்க வேண்டும் என்றும், மக்களை பாதிக்காத வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தயாநிதிமாறன் பேசும் போது, மறுசீரமைப்பு பணிகள் காரணமாக 60 சதவீதம் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முடிவதற்கு மார்ச் 30 தேதி வரை ஆகும் என தெரிவித்துள்ளார்கள்..

எழும்பூர் ரயில் நிலையத்தில் மார்ச் 30 வரை பணிகள்

இது குறித்து ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறேன். எழும்பூர் ரயில் நிலையம் பழுதடைந்த நிலையில் இருக்கிறது.. நாங்கள் அதை மேற்கொள்ள வேண்டிய வேலையை செய்ய விட்டால் , இன்னும் பழுதடைந்து ஏற்கனவே இருக்கின்ற எக்ஸ்பிளேட்டர் பிளாட்பார்ம் பயணிகள் வசதி இல்லை.. இந்த பணி முடிவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்றால் மார்ச் 30 வரை ஆகும் என்று அவர்கள் சொல்கிறார்கள் முன்னதாக முடிப்பதற்கான முயற்சிகளை எடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்..

திங்கள்கிழமைக்குள் நல்ல முடிவு

மக்கள் அவதிபடாமல் இருப்பதற்கு வருகிற திங்கட்கிழமைக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே இருக்கக்கூடிய ரயில்களில் 5 பெட்டி கூடுதலாக சேர்க்கப்படும் என்றும் என்னிடம் கூறினார்கள். எனினும் இந்தப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவில்லை என்றால் துறை சார்ந்த மத்திய ரயில்வே அமைச்சருக்கு பிரச்சினை சம்பந்தமாக எடுத்துச் செல்லலாம் என இருக்கிறோம்.... காலை மாலை பீக்கவர்ஸ் நேரங்களில் அதிகமாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்" இவ்வாறு தயாநிதி மாறன் எம்பி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+