பொங்கல் பண்டிகை.. தமிழ்நாட்டில் 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை!
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகி இருக்கிறது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை காலங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே மது விற்பனை அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது பலரும் சொந்த ஊர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த கொண்டாட்டங்களின் போது இளைஞர்கள் பலரும் மது குடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. போகிப் பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதியன்று மட்டும் ரூ. 217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான ஜனவரி 15ஆம் தேதியன்று ரூ.301 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ரூ.98.75 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.85.13 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.95.87 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.76.02 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.79.59 கோடிக்கும் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மனமகிழ் மன்றங்களில் கடந்த 14ஆம் தேதி ரூ.33.16 கோடிக்கும், நேற்று ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 4 நாட்கள் விடுமுறையில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சாதனையை இந்த ஆண்டு முறியடிக்கப்பட அதிக வாய்ப்புகள் அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸான படங்களை விடவும் டாஸ்மாக்கில் அதிக கலெக்ஷன் நடந்துள்ளதாக சாமானிய மக்கள் கிண்டல் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
பொங்கல் விடுமுறை இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் சூழலில், டாஸ்மாக் மது விற்பனை அடுத்தக்கட்டத்தை எட்டும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். டாஸ்மாக் மது விற்பனை மூலமாக அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து, அது பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கூறப்பட்டாலும், குடி பழக்கத்தால் ஏற்படும் குற்றங்கள் அதிகரிப்பது விவாதமாகி இருக்கிறது.
-
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications