சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிணறு வெட்ட கிளம்பிய பூதம்..! சென்னை மெரினாவில் தோண்ட தோண்ட கள்ள சாராயம்! திகைத்து நின்ற போலீஸ்..!

Google Oneindia Tamil News

சென்னை: கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துகளின் புழக்கம் சென்னையில் அதிகரித்துள்ள நிலையில், சென்னையின் மிக முக்கிய இடமான மெரினா கடற்கரை மணலில் புதைத்துவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, ஆப்ரேசன் கஞ்சா 2.0 என்ற திட்டம் மூலம் சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார்.

கஞ்சா மட்டுமல்லாது மது போதையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை கண்காணிக்க உத்தரவிட்ட நிலையில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக சென்னை மெரினா கடற்கரையில் சாராயம் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இனி யாராவது கஞ்சா விற்றால் ..” உள்துறைக்கு அனுப்பியாச்சு - அதிரடியாக அறிவித்த ஸ்டாலின்! “இனி யாராவது கஞ்சா விற்றால் ..” உள்துறைக்கு அனுப்பியாச்சு - அதிரடியாக அறிவித்த ஸ்டாலின்!

சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் அதிர்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை சிறு பாட்டில்கள் மற்றும் ஒரு லிட்டர், 2 லிட்டர் என அடைத்துவைக்கப்பட்டு 50 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கள்ள சாராயம் விற்பனை

கள்ள சாராயம் விற்பனை

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் ரகசியமாக தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அதில் சில் பெண்கள் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. குறிப்பாக கூலித் தொழிலாளிகள், மீனவர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து சாராயம் விற்கப்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து மெரினா கடற்கரையில் நேதாஜி சிலை, கண்ணகி சிலைக்கு இடைப்பட்ட மணற்பரப்பில் கள்ளச்சாராயம் புதைத்து வைத்திருந்த கள்ளச் சாராயத்தை ஜேசிபி இயந்திரங்களை வைத்து தோண்டி எடுத்தனர்.

3 பேர் கைது

3 பேர் கைது

2 லிட்டர், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் பதுக்கி வைத்திருந்த 35 லிட்டர் கள்ளச் சாராயத்தை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சாராயத்தை மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா ஆகிய 3 பேரை கைது செய்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் அச்சம்

பொதுமக்கள் அச்சம்

மேலும் அவர்களுடன் வசித்து வந்த 35 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாடோடிகள் குடும்பமாக தங்கி வந்ததும், இவர்கள் ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் உள்ள மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. சென்னையில் கஞ்சா, உள்ளிட்ட போதை வஸ்துக்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது கள்ளச்சாராயம் விற்பனையால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

English summary
The incident in which liquor was sold buried in the sand of Marina Beach, the most important place in Chennai, has caused great shock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X