சென்னைக்கு படையெடுத்த.. ராட்சச ஆப்பிரிக்க நத்தை.. மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கு.. கவனம்
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உலகிலேயே மிக மோசமான ஊடுருவும் உயிரினங்களில் ஒன்றான ராட்சச ஆப்பிரிக்க நத்தை (Lissachatina fulica) பரவியுள்ளது. இந்த நத்தைகள் மனிதர்களுக்கு மூளை அழற்சியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளைச் சுமந்து செல்கின்றன. குறிப்பாக வெள்ளம் வரும் காலங்களில் இந்த நத்தைகள் வேகமாகப் பரவி, நகர்ப்புற மக்களுக்கு தீவிர ஆபத்தை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
செப்டம்பர் முதல் நவம்பர் 2024 வரை நகர்ப்புற மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், செயின்ட் தாமஸ் மவுண்ட், திருசூலம், பெருங்களத்தூர் மலைகள் ஆகிய இடங்களில் இந்த ஊடுருவும் நத்தைகளின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, சிதம்பரம், கோயம்புத்தூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இதன் இருப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பரவும் ராட்சச ஆப்பிரிக்க நத்தை
இந்த நத்தைகள் விவசாயப் பயிர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கு மூளை தொற்று (eosinophilic meningoencephalitis) மற்றும் வயிற்று நோய்களை (abdominal angiostrongyliasis) ஏற்படுத்தும் Angiostrongylus cantonensis மற்றும் A. costaricensis போன்ற ஒட்டுண்ணி நூற்புழுக்களின் பரப்பியாகவும் செயல்படுகின்றன என்று ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடுமையான உடல் பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.
அசுத்தமான நத்தைகள் அல்லது அவற்றின் எச்சங்களை தொடுவதன் மூலம் இந்த நோய்த்தொற்றுகள் பரவுகின்றன. நத்தைகளின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இவை பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. எல். ஃபுலிகா போன்ற நோய்களைப் பரப்பும் உயிரினங்களால் சென்னைக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது. இது பொது சுகாதாரத்திற்கு பெரும் கவலை அளிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் ஊடுருவிய ராட்சச ஆப்பிரிக்க நத்தை
மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நத்தைகளின் பரவலை அதிகரித்து, வளங்களை மாசுபடுத்துகிறது. மழைக்காலங்களில், குறிப்பாக குளிர்கால மாதங்களில் நத்தைகள் தங்கள் உறக்க நிலையிலிருந்து வெளிவரும்போது இந்த ஆபத்து அதிகரிக்கிறது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளை சென்னை ஃபெட்ஸ்டான் ஜிஎம்சி, பெங்களூரு டிரான்ஸ்-டிசிப்ளினரி ஹெல்த் சயின்சஸ் மற்றும் டெக்னாலஜி பல்கலைக்கழகம், பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் ஆகியவை வெளியிட்டு உள்ளன.
பல்வேறு வாழ்விடங்களிலும், பலவிதமான உணவுகளையும் உண்டு வாழும் இந்த நத்தை 500-க்கும் மேற்பட்ட தாவர வகைகளை உணவாகக் கொள்கிறது. இதில் விவசாயப் பயிர்களும் அடங்கும். இது உலகிலேயே '100 மோசமான அந்நிய ஊடுருவும் உயிரினங்கள்' பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. இதனால் அதன் பரவலையும், சுற்றுச்சூழல் தாக்கத்தையும் ஆவணப்படுத்துவது அவசரம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் பரவும் ராட்சச ஆப்பிரிக்க நத்தை
இந்தியாவில் இந்த இனத்தின் வரலாறு 1847-ஆம் ஆண்டு தொடங்கியது. மொரிஷியஸிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு நத்தைகளை கொல்கத்தாவில் உள்ள ஒரு நண்பருக்கு விலங்கியல் அறிஞர் வில்லியம் ஹென்றி பென்சன் பரிசளித்தார். அந்த நண்பர் அவற்றை தனது தோட்டத்தில் வளர்த்தார். அதன்பிறகு, கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வர்த்தகக் கப்பல்கள் மூலம் இந்தியா வந்த இந்த இனம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பரவியுள்ளது. 1984-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சென்னை, சிதம்பரம், கோயம்புத்தூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இதன் இருப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications