இந்தியாவிலேயே குற்ற வழக்குகள் அதிகம் கொண்ட முதல்வர்களின் பட்டியல்! ஸ்டாலினுக்கு எத்தனையாவது இடம்?
சென்னை: இந்தியாவிலேயே குற்ற வழக்குகள் கொண்ட முதல்வர்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் யார் தெரியுமா? தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எத்தனையாவது இடம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெறக் கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்ற மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கிரிமினல் வழக்குகள் அதிகம் கொண்ட மாநில முதல்வர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருவகிறது ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association for Democratic Reforms- ADR) ஆகும்.
இந்த அமைப்பு தற்போது மாநில முதல்வர்களின் சொத்து மதிப்புகளை வைத்து இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் யார் என்பதையும் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர் யார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர்களில் முதலிடம் பிடித்தது ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவருக்கு ரூ 931 கோடி சொத்து உள்ளது. அது போல் அடுத்த இடத்தில் பெமா காண்டு இருக்கிறார். அவருக்கு ரூ 332 கோடி சொத்து உள்ளது. அடுத்த இடத்தில் சித்தராமையா ரூ 51 கோடி சொத்துகள் உள்ளது.
பணக்கார முதல்வர்களில் கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி ரூ 15 லட்சம் சொத்துகளுடனும் ஒமர் அப்துல்லா 55 லட்சம் சொத்துக்களுடனும், பினராயி விஜயன் ரூ 1 கோடி சொத்துக்களும் உள்ளன.
அது போல் குற்ற வழக்குகள் அதிகம் கொண்ட மாநில முதல்வர்களின் பட்டியலையும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றில் முதல் 5 இடங்களில் இருப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா)- 89 வழக்குகள்
மு.க.ஸ்டாலின் (தமிழகம்)- 47 வழக்குகள்
சந்திரபாபு நாயுடு (ஆந்திரா)- 19 வழக்குகள்
சித்தராமையா (கர்நாடகா)- 13 வழக்குகள்
ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்)- 5 வழக்குகள்












Click it and Unblock the Notifications