சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெடியானது லிஸ்ட்.. தள்ளுபடி செய்யப்படும் "கடன்".. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்.. குட் நியூஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு உதவித்தொகை என்று பல்வேறு சமூக நீதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தினத்தையொட்டி தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

அரசு மகளிர் விடுதி ஜன்னலில் ஓட்டை! நம்ம பிள்ளைக படிச்சா இப்படி இருப்போமா? செல்வப்பெருந்தகை வார்னிங் அரசு மகளிர் விடுதி ஜன்னலில் ஓட்டை! நம்ம பிள்ளைக படிச்சா இப்படி இருப்போமா? செல்வப்பெருந்தகை வார்னிங்

திட்டம்

திட்டம்

அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

 ஏன் வரவில்லை

ஏன் வரவில்லை

தமிழ்நாட்டில் நிதி நிலைமை கடந்த ஒரு வருடமாக சரியில்லை. இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கி உள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட, நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் : சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

அதன்படி மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கான பயனாளிகள் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த லிஸ்ட் தற்போது சரி பார்க்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.75 கோடி கடன் வரை உள்ளது. இந்த கடன் அப்படியே தள்ளுபடி செய்யப்படும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த பின் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஏன் தாமதம்?

ஏன் தாமதம்?

இது தொடர்பாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்ததில், நிதி நிலைமை காரணமாக இந்த கடனை தள்ளுபடி செய்யாமல் இருந்தனர். தற்போது நிதி நிலைமை சரி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடனை தள்ளுபடி செய்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன, என்று தெரிவித்து உள்ளனர்.

English summary
Loan to be waived off soon for the woman self-help groups in Tamil Nadu says the minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X