Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்க பாமக இருக்குதே.. வேண்டவே வேண்டாம்.. அதிமுக வைத்த செம லாக்.. பட்டென மறுத்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை; அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று மாலை நடைபெற்ற நிலையில் பாஜக கேட்ட இடங்களை அதிமுக கொடுக்க முன்வரவில்லை. இந்த கூட்டத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது கூட்டணி கட்சி போட்டியிடும் இடங்களை திமுக சைலண்ட்டாக தேர்வு செய்துவிட்டது. திமுகவின் கூட்டணி கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எதிர் கேம்ப் அதிமுகவில் இன்னும் கூட்டணி உடன்படிக்கை எட்டப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறும் (வெளியேற்றப்படும்) நிலை ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்களாக தலா 4 மணி நேரம் என்று 8 மணி நேரம் கூட்டணி ஆலோசனை செய்தும் கூட பாஜக கேட்ட இடங்களை அதிமுக தர மறுத்து இருக்கிறதாம்.. மீட்டிங்கில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

மீட்டிங்கில் என்ன நடந்தது?

மீட்டிங்கில் என்ன நடந்தது?

அதிமுகவிடம் ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சிக்கு தலா 30 சதவிகித இடங்களை பாஜக கேட்டு இருக்கிறதாம். இதில் 30 சதவிகிதம் என்பது வார்டு இடங்கள் ஆகும். இது போக கோவை, திருப்பூர், நெல்லை, குமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 50 சதவிகித இடங்கள் வேண்டும் என்று பாஜக கேட்டு இருக்கிறதாம். அதோடு சென்னையில் 50 சதவிகித இடங்கள் வேண்டும் என்று பாஜக கேட்டுள்ளதாம். அதாவது சென்னையில் குறைந்தபட்சம் 100 வார்டுகள் வேண்டும் என்று பாஜக கேட்டு இருக்கிறதாம்.

அதிமுக மறுப்பு

அதிமுக மறுப்பு

ஆனால் இது எதற்குமே அதிமுக தரப்பு தயாராக இல்லை. அதிமுக கொடுக்க தயாராக இருந்தது மாவட்டத்திற்கு 5 சதவிகித இடங்கள் மட்டுமே. உங்களின் வாக்கு சதவிகிதம் அடிப்படையில்தான் கொடுக்கிறோம். 5 சதவிகிதத்திற்கு மேல் கொடுக்க முடியாது. சென்னையில் 50 சதவிகித இடங்கள் எல்லாம் வாய்ப்பே இல்லை என்று அதிமுக கூறியுள்ளதாம். இதையடுத்து இறங்கி வந்த பாஜக.. எல்லா இடங்களிலும் போட்டியிட்டு வெல்வது கடினம் என்பதால் வலுவாக இருக்கும் இடங்களையாவது கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.

வலுவான இடங்கள்

வலுவான இடங்கள்

அதன்படி பாஜக வலுவாக இருப்பதாக கருதப்படும் கோவை, நெல்லை, திருப்பூர், குமரி, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மட்டுமாவது 30 சதவிகித இடங்களுக்கும் அதிகமாக வேண்டும் என்று பாஜக கேட்டு இருக்கிறது. எங்கள் எம்எல்ஏக்கள் இருக்கும் மாவட்டங்களிலாவது அதிக இடங்களை ஒதுக்குங்கள் என்று பாஜக கேட்டு இருக்கிறதாம். ஆனால் அதிமுகவோ தென் மாவட்டங்களிலும், கொங்கிலும் அதிக இடங்களை ஒதுக்க முடியாது. கோவை, நெல்லை, திருப்பூர், குமரி, தேனி எல்லாம் அதிமுகவும் வலுவாக இருக்கும் இடங்கள்.

ஒதுக்க முடியாது

ஒதுக்க முடியாது

அதனால் அந்த இடங்களை ஒதுக்க முடியாது. வேண்டும் என்றால் வடமாவட்டங்களில் போட்டியிட கொஞ்சம் கூடுதல் இடம் தருகிறோம். மற்ற மாவட்டங்களில் 5 சதவிகிதம்தான் தருவோம் என்று அதிமுக கூறி உள்ளதாம். அதாவது கடலூர், விழுப்புரம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் மட்டும் 30 சதவிகிதம் தர அதிமுக தயார் என்று கூறி லாக் வைத்துள்ளதாம். ஆனால் பாஜகவோ.. அது பாமக வலுவாக இருக்கும் இடம்.. அங்கே போட்டியிடுவது கடினம்.. அதோடு பாமகவோடு நேரடி மோதல் இல்லை.

மோதல் இல்லை

மோதல் இல்லை

அப்படி இருக்கும் போது பாமக வலுவாக உள்ள இடங்களில் மட்டும் அதிக வார்டுகளை கொடுத்தால் என்ன நியாயம் என்று பாஜக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக இதில் பிடிவாதமாக இருந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு எதுவும் எட்டப்படாமல் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி நேரடியாக இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடாது. அடுத்த லோக்சபா தேர்தல் வரை அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி இப்படி கசப்போடுதான் இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+