சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் உட்பட.. 5 மாநிலங்களுக்கும் ஒவ்வொரு காரணம்.. ரிசல்ட்டை தீர்மானித்த மாநில விவகாரங்கள்- சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பக்கம் கொரோனா நாட்டையே உலுக்கிய நிலையில் , தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான் டெவலப் இன் சொசைட்டி மையம் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பல்வேறு சுவாரசிய தகவல்களை தாங்கி வந்துள்ளன.

கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் மீண்டும் அதே ஆட்சியை தேர்வு செய்துள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம்.. தேச துரோக வழக்கில் கைதான இருவருக்கு ஜாமீன்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவுபிரதமர் மோடிக்கு எதிராக கோஷம்.. தேச துரோக வழக்கில் கைதான இருவருக்கு ஜாமீன்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு

இது தேர்தல் முடிவுகளை வைத்து அலசி பார்த்தபோது, உள்ளூர் தலைவர்களின் செல்வாக்குதான், வெற்றி தோல்விகளில் முக்கிய பங்காற்றியுள்ளது. மாநிலம் சார்ந்த விவகாரங்கள் தான் வெற்றி தோல்வியை தீர்மானித்துள்ளதே தவிர எந்த தேசிய தலைமையும் தீர்மானிக்கவில்லை என்பதுதான் ரிசல்ட் சொல்லக்கூடிய பாடமாக இருந்தது.

தமிழக மனநிலை

தமிழக மனநிலை

தமிழகத்தைப் பொறுத்தளவில் அதிமுக 10 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது. இதன் காரணமாக, இயல்பாகவே ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு மனநிலையில் மக்கள் இருப்பார்கள். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இல்லாமல் சந்திக்க கூடிய முதல் தேர்தலாக இது அமைந்திருந்தது . கருணாநிதியின் மகன் என்ற வகையில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் ஸ்டாலின் திமுக தலைவராக இருக்கிறார். எனவே இயல்பாக ஆட்சி மாற்றத்தின் போது அவருக்காக திமுகவுக்கு ஓட்டுகள் விழுந்துள்ளன. அதேநேரம் ஜெயலலிதாவுக்கு மாற்றாக , எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் மக்கள் பார்க்கவில்லை என்று தெரிகிறது.

புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை பொறுத்தளவில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அந்த காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் அந்த அரசு மீது எந்த ஒரு அனுதாபமும் கிடைக்கவில்லை. அவர்கள் செய்த மக்கள் நலப் பணிகளை சொல்லி ஓட்டு கேட்கும் அளவுக்கு அங்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. எனவே இயல்பாக அங்கு ஆட்சி மாற்றம் நடைபெற்று என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அசாம் மத அரசியல்

அசாம் மத அரசியல்

அசாம் மாநிலத்தை பொறுத்தளவில் மத விவகாரம் அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குகளை ஒருங்கிணைத்து உள்ளது. மத விவகாரங்களை முன்வைத்து அசாம் பாஜக தலைமை தங்கள் சார்பு வாக்குகளை ஓரணியில் திரட்டுவதில் வெற்றி கண்டுள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநில அரசுகளை பொருத்தவில், அங்கு ஆட்சியில் இருப்பவர்களை திரும்பத் திரும்ப ஆட்சியில் அமர்த்தும் மனநிலை கொண்ட வாக்காளர்கள் அதிகம். இதன் காரணமாக, மம்தா பானர்ஜியின் செல்வாக்கு காரணமாக அங்கு மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான கட்சிகள் வெற்றி வாகை சூடியது. எந்த வகையிலும் மத்திய அரசு உடன் தொடர்புடையதாக இந்த மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை என்பது தான் யதார்த்தம்.

அசாம் மட்டும்

அசாம் மட்டும்

இந்த அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், மாநில அரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் உதவி தேவையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதில் , அசாம் மாநிலத்தில் மட்டும் 41 சதவீதம் பேர் முழுமையாக இந்த வாதத்தை ஏற்பதாக கூறியுள்ளனர். கேரளாவில் 19 சதவீதம் பேர், தமிழகத்தில் 11, மேற்கு வங்கத்தில் 26% பேர் மட்டும்தான் இவ்வாறு கூறி உள்ளனர். எனவே மத்திய அரசு விவகாரம் அசாம் தவிர்த்த பிற மாநிலங்களில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது புரிகிறது.

மாநில ஆட்சி நிலவரம்

மாநில ஆட்சி நிலவரம்

மாநிலத்தில் ஆட்சி நடத்துவோருக்கு எதிரான மனநிலை எப்படி இருக்கிறது என்ற கருத்துக் கணிப்பில், அசாம் மாநிலத்தில் 38% பேர் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கூறி உள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 27 சதவீதம் பேரும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 34 சதவீதம் பேரும் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கூறினார். தமிழகத்தில் அதிகபட்சமாக 49 சதவீதம் பேர் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதாக கூறியுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம்

குடியுரிமை திருத்த சட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 10 சதவீதம் பேர் முழுமையாக ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். கேரளாவில் 12 சதவீதம், தமிழகத்தில் 15, மேற்கு வங்க மாநிலத்தில் 21% பேர் முழுமையாக ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலத்தில் 47% பேர் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறியுள்ளனர் . கேரளாவில் 57, தமிழகத்தில் 32, மேற்கு வங்கத்தில் 33 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு, அசாம் மாநிலத்தில் 7 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில் 52% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 17 சதவீதம்பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் 35 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

English summary
Local politics was played a crucial role in five State assembly elections including Tamil Nadu says post poll survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X