"விட மாட்டேன்".. போட்டு தாக்கும் ஓபிஎஸ்.. ரெடியாகும் இன்னொரு பிளான்.. மிரளும் எடப்பாடியார்..!
ஓ பன்னீர்செல்வமும் டெல்லி செல்லவிருப்பதாக கூறப்படுகிறது
சென்னை: ஒரு முக்கியமான விஷயம் தமிழக அரசியலில் வட்டமடிக்கிறது.. ஆனால், அது உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை கசிந்து வரும் செய்தி நிஜம் என்றால், அதிமுகவில் மேலும் சில சலசலப்புகள் நிகழவும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே அதிமுக தலைமையில் பிரச்சனைகள் உள்ளன.. இரட்டை தலைமை விவகாரம் மெல்ல தலைதூக்கி அது அடங்கிவிட்டது..
அடுத்து முதல்வர் வேட்பாளர் விவகாரம் தலைதூக்கி, இவர்கள் 2 பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் கோபித்து கொண்டு, இவர்களை அமைச்சர்கள் ஒருவழியாக சமாதானம் செய்தனர். இறுதியில் முதல்வர் வேட்பாளர் விவகாரமும் முடிவுக்கு வந்தது.

பாஜக
ஆனால், அதுவும் முழுசாக முடிவுக்கு வரவில்லை.. பாஜக இப்போதுவரை முதல்வர் வேட்பாளரை ஏற்கவில்லை.. அதற்கேற்றார்போல் ஓபிஎஸ்-சும் மவுனத்தை விடாமல் கடைப்பிடித்து வருகிறார். எனவே இந்த விஷயத்தில் பாஜக ஏதாவது குண்டை தூக்கி போட போகிறதா? அல்லது வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளர் ஆப்ஷனில் வைத்துள்ளதா? அந்த ஆப்ஷனில் இருப்பது ஓபிஎஸ்ஸா? சசிகலா? என இப்போது வரை நமக்கு தெரியாது.

எடப்பாடியார்
எனினும் எடப்பாடியாருடனான அதிருப்தி மட்டும் இன்னும் தொடர்கிறது.. இவர்கள் 2 பேரும் ஒரே காரில் சென்று பிரச்சாரம் செய்யவும், எல்லா அதிருப்தியும் தவிடுபொடியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலவரம் அப்படி இல்லை போல தெரிகிறது.. இப்போதும் ஒரு செய்தி கசிந்து வருகிறது.. அதாவது, முதல்வர் டெல்லி சென்றது ஓபிஎஸ் தரப்புக்கு கடுப்பை தந்துள்ளதாம்..

அரசு முறை பயணம்
காரணம், அரசு முறை பயணம் என்றால், ஆட்சியில் ஓபிஎஸ்ஸூம்தான் பொறுப்பில் இருக்கிறார்.. முக்கியமான முடிவுகளை ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடியாரால் தனித்து எடுக்கவும் முடியாது.. இதுதான் விதி.. எனவே, பதவியில் இருக்கும் ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு, முதல்வர் மட்டும் டெல்லிக்கு போய் ஆலோசனை நடத்தியதில் வருத்தம் இருக்கிறதாம்.

டெல்லி பயணம்
அதனால்தான், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் வீடியோ கான்பரன்ஸில் ஆலோசனை நடத்தி, நிதி தேவைக்கான கோரிக்கையாக முன்வைத்தாராம் ஓபிஎஸ்.. அப்போதும் மனசு ஆறவில்லை போலும்.. அதனால், தானும் ஒருமுறை டெல்லி செல்லலாம் என்று யோசித்து வருகிறாராம்.. இந்த விஷயத்தை அறிந்து கொண்ட எடப்பாடியாரோ, டெல்லி பயணம் என்றால், இருவரும் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்லி வருகிறாராம்..!
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications