கேக் காஞ்சு போச்சு.. காதலனும் வரவே இல்லை.. காத்திருந்து நொந்து போன சரண்யா.. எடுத்த ஷாக் முடிவு
கேக் வெட்ட காதலன் வராததால் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: கேக் வெட்ட காதலன் வரவேயில்லை.. காத்திருந்து காத்திருந்து கடுப்பான 23 வயசு சரண்யா ஃபேனில் தூக்கு போட்டு கொண்டார்.. மனம் நொந்து இந்த முடிவை எடுத்த சரண்யா, ஒரு பெண் போலீஸ் ஆவார்!!!
விழுப்புரத்தை சேர்ந்தவர் சரண்யா.. வயது 21.. சென்னை ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக வேலை பார்த்து வந்தார்... அயனாவரம் பனந்தோப்பு காலனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் சாயங்காலம் டியூட்டி முடிந்து வீட்டுக்கு வந்த சரண்யா, கொஞ்ச நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.. பக்கத்து வீட்டில் வசிக்கும் சக தோழி, சரண்யாவின் சடலம் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி, ஓட்டேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசாரும் விரைந்து வந்து சரண்யாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.
பிறகு எதற்காக சரண்யா தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போதுதான் விவகாரம் வெளியே வந்தது.சரண்யா, 2017-ம் ஆண்டு முதல் தன்னுடன் டிரெயினிங்கில் இருந்த போலீஸ்காரர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. அவருக்கும் வயது 23தான்.. சென்னையில் உள்ள ஒரு ஸ்டேஷனில் போலீசாக இருக்கிறார்.
நேற்றுமுன்தினம் அந்த போலீஸ்காரருக்கு பிறந்தநாள்.. இதனால் சரண்யா, காதலனுக்காக ஸ்பெஷலாக கேக் வெட்ட ஏற்பாடு செய்தார்.. அதற்காக காதலனை தன் வீட்டிற்கும் வரும்படி சொல்லி இருந்தார்.. வீட்டில் தடபுடல் ஏற்பாடுகளை செய்து, ஒரு பர்த்டே கிப்ட்டையும் வாங்கி வைத்திருந்தார். ஆனால் அந்த போலீஸ்காரருக்கும் கொரோனா தடுப்பில் டியூட்டி போட்டு விட்டார்கள்.
அதனால் பணி காரணமாக கேக் வெட்ட தம்மால் வர முடியாது என்று சொல்லி உள்ளதாக தெரிகிறது.. இதை தாங்கி கொள்ள முடியாத சரண்யா, மனம் உடைந்து ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கேக் வெட்ட காதலன் வராததால் பெண் போலீஸ் உயிரிழந்தது சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications