கிராமப்புறங்கள், விவசாயத்திற்கு லாக்டவுனிலிருந்து பெரும் தளர்வு.. அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு, லாக்டவுனில் நிறைய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமில்லாத பகுதிகளுக்கு மட்டும் இது பொருந்தும். கிராமப்புறங்களுக்கு இந்த விஷயத்தில் நிறைய சலுகைகள் உள்ளன.
Recommended Video
இதுகுறித்த அறிவிப்பை பாருங்கள்: தினக் கூலி தொழிலாளர்கள், மற்றும் பிறருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய நடவடிக்கைகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கும்.

கிராமப்புறங்களில் இயங்கும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், உரிய சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றி இயங்க அவை அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து அனுமதிக்கப்படும். நெடுஞ்சாலை தாபாக்கள், கன ரக வாகனங்களான லாரி போன்றவற்றை பழுதுபார்க்கும் கடைகள் திறந்திருக்கும்.
அரசாங்க நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் ஏப்ரல் 20 முதல் மீண்டும் திறக்கப்படலாம். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் உற்பத்தி பிரிவுகள் இயங்கும்.
கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஒரு உத்வேகத்தை அளிக்க, உணவு பதப்படுத்தும் தொழில்கள் உட்பட கிராமப்புறங்களில் இயங்கும் தொழில்களான, சாலைகள், நீர்ப்பாசன திட்டங்கள், கட்டிடங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொழில்துறை திட்டங்கள் போன்றவை, ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும்.
நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, கிராமப்புற பொது சேவை மையங்களின் செயல்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர் உட்பட கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.
-
இந்தியா தான் முக்கியமான அச்சாணி.. நங்கூரம் போல் நச்சுன்னு சீனாவிற்கு செக்.. அமெரிக்கா பாராட்டு -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications