தமிழ்நாடு + புதுச்சேரி.. 10 தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா? உத்தேச பட்டியல்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழகத்தில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி என 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி உள்ள நிலையில் அங்கு களமிறங்கும் வேட்பாளர்கள் பற்றிய உத்தேச பட்டியல் வருமாறு:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.தமிழ்நாட்டில் 9 லோக்சபா தொகுதி + புதுச்சேரி என மொத்தம் 10 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை என 9 தொகுதிகள் தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட வெற்றி பெற்ற திருச்சி, ஆரணி தொகுதியும், தோல்வியடைந்த தேனி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, நெல்லை தொகுதிகள் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த 10 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்? என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ள நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பியாக டாக்டர் கே ஜெயக்குமார் உள்ளார். இந்த தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கலாம் என கூறப்படுகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது அவர் அம்மாநில வார்ரூம் பொறுப்பாளராக செயல்பட்டு காங்கிரஸ் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர்: கடலூர் தொகுதியில் தற்போது திமுக எம்பியாக டிஆர்விஎஸ் ரமேஷ் உள்ளார். வரும் தேர்தலில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கடந்த 2009 தேர்தலில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலையில் கேஎஸ் அழகிரிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு வயது என்பது ஒரு தடையாக உள்ளது. அவருக்கு 72 வயது ஆகிறது. வயதை தடையாக காங்கிரஸ் மேலிடம் நினைத்தால் புது முகத்துக்கு காங்கிரஸ் வாய்ப்பு அளிக்கலாம்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி எம்பியாக தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ செல்லக்குமார் உள்ளார். வரும் தேர்தலில் மீண்டும் அவரே களமிறங்கலாம் என கூறப்படுகிறது. ஏ செல்லக்குமார் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார். மேலும் பிற மாநிலங்களின் மேலிட பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கே மீண்டும் கிருஷ்ணகிரி தொகுதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
நெல்லை: திருநெல்வேலி எம்பியாக திமுகவின் ஞானதிரவியம் உள்ளார். இந்நிலையில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. கடந்த 2004ல் தனுஷ்கோடி ஆதித்தன், 2009ல் ரமேஷ் சுப்பு ஆகியோர் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். வரும் தேர்தலில் 2 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ வேல்துரையின் மகன் ஆகியோரில் ஒருவர் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இதில் பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் கமிஷன் தலைவராக உள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் மற்றும் திமுக தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளதால் பீட்டர் அல்போன்ஸ்சுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சிவகங்கை: சிவகங்கையில் தற்போது காங்கிரஸ் எம்பியாக கார்த்தி சிதம்பரம் உள்ளார். இவருக்கு அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இருப்பினும் ப சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி மேலிடத்திடம் செல்வாக்கு உள்ளது. இதன்மூலம் ப சிதம்பரத்தின் மகனும், சிட்டிங் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் தான் மீண்டும் சிவகங்கையில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
கரூர்: கரூர் தொகுதியில் சிட்டிங் எம்பியாக ஜோதிமணி உள்ளார். இந்த முறை கரூர் தொகுதியில் திமுக போட்டியிடுவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கே திமுக வழங்கி உள்ளது. ஜோதிமணிக்கு காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் உள்ள செல்வாக்கு தான் கரூர் தொகுதியை அந்த கட்சிக்கு திரும்ப பெற்று தந்துள்ளது. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதிமணியே போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தற்போது சிட்டிங் எம்பியாக விஜய் வசந்த் உள்ளார். மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகனான இவர் மீண்டும் அங்கு போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் சிட்டிங் எம்பியாக மாணிக்கம் தாகூர் உள்ளார். இவர் காங்கிரஸ் மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். அதோடு கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு மாணிக்கம் தாகூரின் செயல்பாடும் முக்கியமானது. ஏனென்றால் அவர் தெலுங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக செயல்பட்டு இருந்தார். தற்போது மாணிக்கம் தாகூர் எம்பி ஆந்திரா மேலிட பொறுப்பாளராக உள்ளார். மேலும் லோக்சபாவில் காங்கிரஸ் கொறடாவாக பணியாற்றினார். இதனால் விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூரே போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாவிட்டது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை எம்பியாக தற்போது திமுகவின் ராமலிங்கம் உள்ளார். இந்த தொகுதி தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வென்ற திருச்சி தொகுதியை இந்த முறை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ள வைகோவின் மதிமுகவுக்கு வழங்க ஓகே சொன்னது. இதற்கு பதிலாக மயிலாடுதுறையை காங்கிரஸ் கேட்டு வாங்கி உள்ளது. இந்த தொகுதியிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. காங்கிரஸ் இந்த தொகுதியில் 8 முறை வெற்றி பெற்றுள்ள. மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் இந்த தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். வரும் தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளான பீரவீன் சக்கரவர்த்தி, ஹசினா சையத் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி: புதுச்சேரியை பொறுத்தமட்டில் கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் வி வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மீண்டும் புதுச்சேரி எம்பியாக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. புதுச்சேரியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் திமுக மீண்டும் புதுச்சேரியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வட்பாளர் பட்டியல் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். அப்போது இந்த 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் மேலிடம் யாரை களமிறக்குகிறது என்பது உறுதியாக தெரிந்துவிடும்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications