Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் 1 கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.. லோக்சபா தேர்தலில் ‘ஷாக்’ தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) 21 மாநிலத்தில் 102 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Lok sabha election 2024 1 crore 90 lakh 36 thousand 781 people did not vote in tamilnadu


தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஓரே கட்டமாக நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91% வாக்குகளும் பதிவானது.

தமிழ்நாட்டில், மொத்தமுள்ள 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்களில் 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான் வாக்களித்துள்ளனர். 30.54 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. அதாவது 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர் வாக்களிக்கவில்லை.

வடசென்னை மக்களவைத் தொகுதியில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், வெறும் 60.13 சதவீதம் பேர் தான் வாக்களித்துள்ளனர். அதாவது, 8 லட்சத்து 99 ஆயிரத்து 679 பேர் வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் வாக்களிக்க வரவில்லை.

இதேபோல, தென்சென்னை லோக்சபா தொகுதியில் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 54.27 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 10 லட்சத்து 97 ஆயிரத்து 954 பேர் வாக்களித்துள்ளனர். 9 லட்சத்து 25 ஆயிரத்து 179 பேர் வாக்களிக்கவில்லை.

"69% வாக்குப்பதிவு.." ஆமா தமிழகத்தில் வாக்கு சதவீதம் எப்படி கணக்கிடப்படுகிறது? இதுல இவ்வளவு இருக்கா


மேலும், மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 53.91 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 7 லட்சத்து 27 ஆயிரத்து 871 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 6 லட்சத்து 22 ஆயிரத்து 290 பேர் வாக்களிக்கவில்லை.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.47 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் அதை விட சுமார் 3 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தொடர் விடுமுறை மற்றும் கடும் வெயில் காரணமாக அதிகமான மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! புது அப்டேட்


லோக்சபா தொகுதி வாரியாக வாக்குப்பதிவு:

திருவள்ளூர் – 68.31 %
வட சென்னை – 60.13 %
தென் சென்னை – 54.27 ச%
மத்திய சென்னை – 53.91 %
ஸ்ரீபெரும்புதூர் – 60.21 %
காஞ்சிபுரம் – 71.55 %
அரக்கோணம் – 74.08 %
வேலூர் – 73.42 %
கிருஷ்ணகிரி – 71.31 %
தருமபுரி – 81.48 %
திருவண்ணாமலை – 73.88 ச%
ஆரணி – 75.65 %
விழுப்புரம்- 76.47 %
கள்ளக்குறிச்சி – 79.25 %
சேலம்- 78.13 %
நாமக்கல் – 78.16 %
ஈரோடு – 70.54 %
திருப்பூர் – 70.58 %
நீலகிரி – 70.93 %
கோவை – 64.81 %
பொள்ளாச்சி -70.70 %
திண்டுக்கல் – 70.99 %
கரூர்- 78.61 %
திருச்சி -67.45 %
பெரம்பலூர் – 77.37 %
கடலூர் – 72.28 %
சிதம்பரம் – 75.32 %
மயிலாடுதுறை – 70.06 %
நாகப்பட்டினம் – 71.55 %
தஞ்சாவூர்- 69.18 %
சிவகங்கை – 63.94 %
மதுரை – 61.92 %
தேனி – 69.87 %
விருதுநகர் -70.17 %
ராமநாதபுரம் -68.18 %
தூத்துக்குடி – 59.96 %
தென்காசி – 67.55 %
திருநெல்வேலி – 64.10 %
கன்னியாகுமரி – 65.46 %

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+