664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 1,749 வேட்புமனுக்களில் 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 664 வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

Lok Sabha Election 2024 1085 out of 1 749 nominations accepted in Tamil Nadu and 664 rejected

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்து முடிந்தது. மொத்தம் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடந்தது. இதில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழகத்தில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 பேரின் வேட்பு மனுக்களும், தென்சென்னையில் 53 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக வடசென்னையில் 49 பேரின் மனுக்கள், நாமக்கல்லில் 48 பேரின் மனுக்கள், ஈரோட்டில் 47 மனுக்கள், கோவையில் 41 மனுக்கள், திருச்சியில் 38 மனுக்கள், வேலூர், திருவண்ணாமலையில் தலா 37 மனுக்கள், கிருஷ்ணகிரியில் 34 மனுக்கள், தூத்துக்குடியில் 26 மனுக்கள், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆரணி தொகுதிகளில் தலா 32 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மேலும் அரக்கோணம், தேனியில் தலா 29 பேரின் மனுக்கள், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி ராமநாதபுரத்தில் தலா 27 பேரின் மனுக்கள், திருநெல்வேலி, தென்காசியில் தலா 26 பேரின் மனுக்கள், தர்மபுரியில் 25 மனுக்கள், பெரம்பலூரில் 23 பேரின் மனுக்கள், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரையில் தலா 21 பேரின் மனுக்கள், பொள்ளாச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூரில் 19 பேரின் மனுக்கள், சிதம்பரத்தில் தலா 18 மனுக்கள், மயிலாடுதுறையில் 17 பேரின் மனுக்கள்,திருப்பூர், நீலகிரியில் தலா 16 பேரின் மனுக்கள்திருவள்ளூரில் 14 மனுக்கள், காஞ்சிபுரம், தஞ்சாவூரில் தலா 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் என்றால் நாகப்பட்டினம் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அதேபோல் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடந்தது. இதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 14 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன தமிழகத்தில் லோக்சபா தேர்தல், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் திரும்ப பெற்று கொள்ளலாம். மேலும் அன்றைய தினம் தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+