அவர் வேண்டாம்.. ஆளுநராக்கிவிடுங்கள்.. மெசேஜ் அனுப்பிய அண்ணாமலை.. கழற்றிவிடப்படும் திமிங்கலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழக பாஜகவை சேர்ந்த இன்னொரு தலைவர் ஆளுநர் ஆக உள்ளாராம். முன்னாள் தலைவரான அவரை தேர்தலில் நிற்க வைக்க வேண்டாம்.. ஆளுநராக்குங்கள் என்று அண்ணாமலை கூறியதாக தெரிகிறது.

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அண்ணாமலையின் நியமனத்திற்கு பின் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. பல இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள், பல்வேறு அணி தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன.

Lok Sabha election 2024: A senior may not get chance and become Governor in Tamil Nadu soon

ஆளுநர் பதவி: இன்னொரு பக்கம் பாஜகவில் சீனியர்களாக இருந்த பல்வேறு தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக எல் . முருகனுக்கு முன்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை தூத்துக்குடியில் தோல்வி அடைந்த பின் 2019ல் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவராக வலம் வந்த முன்னாள் தலைவர் இல கணேசன் 22ம் தேதி ஆகஸ்ட், 2021 அன்று மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக மேற்கு வங்க ஆளுநராக இல கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அதன்பின் இவருக்கு வழங்கப்பட்ட மேற்கு வங்க ஆளுநர் கூடுதல் பொறுப்பு நீக்கப்பட்டது. மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் அதன்பின் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சிபிஆர்: தமிழ்நாடு பாஜக தலைவராக முன்பு இருந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரின் பெயர் மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவருக்கான லிஸ்டில் அடிபட்டு வந்தது. தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் இவரின் பெயரும் மீண்டும் தலைவருக்கான லிஸ்டில் அடிபட்டது. கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு பாஜகவில் பிரச்சனைகள் நிலவி வருகின்றன. திருச்சி சூர்யா - டெய்சி விவகாரம், காயத்ரி ரகுராம் விவகாரம், அலிஷா விவகாரம் என்று பல்வேறு விவகாரங்கள் சர்ச்சையாகின. இந்த நிலையில்தான் சிபி ராதாகிருஷ்ணன் மீண்டும் தலைவராக போவதாக செய்திகள் உலாவ தொடங்கின.

இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பதவி என்பது அரசியலில் இருந்து வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் போன்றது ஆகும். ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுக்கி தள்ளாமல் அவர்களுக்கு மரியாதையாக வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் ஆகும்.

மூத்த தலைவர்: அந்த வகையில் தற்போது லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இன்னொரு தலைவர் ஆளுநர் ஆக உள்ளாராம். முன்னாள் தலைவரான அவரை தேர்தலில் நிற்க வைக்க வேண்டாம்.. ஆளுநராக்குங்கள் என்று அண்ணாமலை கூறியதாக தெரிகிறது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அந்த மூத்த தலைவரை ஓரம்கட்டிவிட்டு இளம் தலைவர் ஒருவரை எம்பியாக்கும் எண்ணம் டெல்லிக்கு வந்துள்ளதாம்.

முன்னாள் தலைவர்களால் தமிழ்நாட்டில் பாஜகவை 5 சதவிகித வாக்குகளுக்கு மேல் கொண்டு செல்ல முடியாத நிலையில்தான் தற்போது மூத்தவர்கள் மொத்தமாக ஓரம் கட்டப்பட்டு இளையவர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டு உள்ளனர். அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி, அலிஷா அப்துல்லா, போன்ற இளம் அரசியல் புள்ளிகள் பாஜகவில் கவனம் பெற தொடங்கி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவில் முக்கிய புள்ளிகளாக இருந்தவர்களில் எச். ராஜா, வானதி சீனிவாசன் மட்டுமே தற்போது கட்சி அரசியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+