‛‛வேட்பாளர் தேர்வு’’.. அதிமுகவில் மார்ச் 10, 11ல் நேர்க்காணல்.. எந்த தொகுதிக்கு எப்போது தெரியுமா?
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் நேர்க்காணல் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. மேலும் எந்தெந்த தொகுதிகளுக்கு எப்போது நேர்க்காணல் நடைபெறும் என்பது பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக அதிக இடங்களை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த 2019 தேர்தலில் தேனியில் மட்டும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். மீதமுள்ள 38 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். கூட்டணியில் இருந்து பாஜக கழற்றிவிடப்பட்டுள்ள நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து களமிறங்க அதிமுக வியூகம் வகுத்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி, புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டது. ஏராளமானவர்கள் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் தான் விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் நடத்தப்பட உள்ளது. இந்த நேர்காணல் என்பது சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கம் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கு நேர்க்காணல் நடத்தப்பட உள்ளது. சென்னையில் உள்ள தலைமை கழக புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 10 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 11ம் தேதி (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் நேர்க்காணல் நடைபெற உள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் (தனி), சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது. மேலும் அதேநாளில் பிற்பகல் 2 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), கோயம்புத்தூர் தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.
அதன்பிறகு 11ம் தேதியான திங்கட்கிழமை பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.
இந்த நேர்க்காணலில் பங்கேற்போர் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications