சீமான் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் வேட்பாளர்கள்-கவுண்டர்கள் 6 பேர், வன்னியர்கள் 6 பேருக்கு வாய்ப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். சீமான் அறிவித்த 40 வேட்பாளர்களில் 6 பேர் கவுண்டர்கள், 6 பேர் வன்னியர்கள்.
லோக்சபா தேர்தல் களத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது. சீமான் கட்சி வழக்கமாக போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இம்முறை கிடைக்கவில்லை. பாஜகவின் சதியால் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காமல் போய்விட்டது என்பது சீமானின் புகார். இதனால் மைக் அல்லது வேறு ஒரு சின்னத்தை கோரியிருக்கிறது நாம் தமிழர் கட்சி.

இந்த நிலையில் சீமான் தமது கட்சியின் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
மு.ஜெகதீஷ் சந்தர் ( திருவள்ளூர் )
அமுதினி ( வட சென்னை )
சு.தமிழ்ச்செல்வி ( தென் சென்னை )
இரா.கார்த்திகேயன் ( மத்திய சென்னை )
வெ.ரவிச்சந்திரன் ( திருப்பெரும்புதூர் )
வி.சந்தோஷ்குமார் ( காஞ்சிபுரம் )
அப்சியா நஸ்ரின் ( அரக்கோணம் )
.மகேஷ்குமார் ( வேலூர் )
வித்யாராணி வீரப்பன் ( கிருஷ்ணகிரி )
அபிநயா பொன்னிவளவன் ( தர்மபுரி )
இரா.ரமேஷ்பாபு ( திருவண்ணாமலை )
கு.பாக்கியலட்சுமி ( ஆரணி )
மு.களஞ்சியம் ( விழுப்புரம் )
ஆ.ஜெகதீசன் ( கள்ளக்குறிச்சி )
க.மனோஜ் குமார் ( சேலம் )
க.கனிமொழி ( நாமக்கல் )
மு.கார்மேகன் ( ஈரோடு )
மா.கி.சீதாலட்சுமி ( திருப்பூர் )
ஆ.ஜெயக்குமார் ( நீலகிரி )
ம.கலாமணி ஜெகநாதன் ( கோவை )
நா.சுரேஷ்குமார் ( பொள்ளாச்சி )
கயிலை ராஜன் ( திண்டுக்கல் )
ரெ.கருப்பையா ( கரூர்)
ராஜேஷ் ( திருச்சி )
இரா.தேன்மொழி ( பெரம்பலூர் )
வே.மணிவாசகன் ( கடலூர் )
இரா.ஜான்சிராணி ( சிதம்பரம் )
காளியம்மாள் ( மயிலாடுதுறை )
மு.கார்த்திகா ( நாகப்பட்டினம் )
ஹுமாயூன் கபீர் ( தஞ்சாவூர் )
வி.எழிலரசி ( சிவகங்கை )
மோ.சத்யாதேவி ( மதுரை )
மதன் ஜெயபாலன் ( தேனி )
சி.கவுசிக் ( விருதுநகர் )
சந்திர பிரபா ஜெயபால் ( ராமநாதபுரம் )
ரொவினா ரூத் ஜேன் ( தூத்துக்குடி )
இசை மதி வாணன் ( தென்காசி )
பா.சத்யா ( திருநெல்வேலி )
மரிய ஜெனிபர் ( கன்னியாகுமரி )
இரா.மேனகா ( புதுச்சேரி )
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் எந்தெந்த ஜாதிக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரத்தை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான சாட்டை துரைமுருகன் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அகமுடையார் 2
இஸ்லாமியர் 2
உடையார் 2
கவுண்டர் 6
கள்ளர் 2
கோனார் 2
நாடார் 2
தேவேந்திர குல வேளாளர் 3
பறையர் 6
மறவர் 2
மீனவர் 2
முதலியார் 1
வன்னியர் 6
வெள்ளாளர் 1
முத்தரையர் 1












Click it and Unblock the Notifications