Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்சி மாற்றம் உறுதி? ஜூன் 1 அலர்ட் ஆகும் ‘இந்தியா’ கூட்டணி! மோடி தியானத்திற்கு செக்! ஷ்யாம் சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கூட்டணியின் கூட்டம் பாஜகவுக்குச் சரியான சவால் என்று மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறியுள்ளார். எப்படி? ஏன்? என்பதைப் பார்ப்போம்.

ஜூன் 1 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்றும் ஒரு பேச்சு அடிபடுகின்றது.

lok sabha election 2024 NDA alliance

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிஜேபியிடம் இருந்து நாடு விடுதலை பெறும், நாட்டுக்கு உண்மையான நல்ல நாட்கள் வரப்போகிறது என்று பேசினார். தனது பேச்சின் ஹைலைட் ஆக ஜூன் 4க்கு பிறகு குட் பை பிஜேபி, குட் பை நரேந்திர மோடி, டாடா! என கிண்டல் செய்தார்.

இந்தப் பேச்சு நாடு முழுவதும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்த மக்களவை தேர்தல் களத்தில் தொடர்ந்து மோடிக்குச் சவால் விடும் தலைவராக ராகுல் காந்தி வலம் வந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில்தான் இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி 7 ஆம் கட்ட இறுதி வாக்குப்பதிவின் போது கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது.

வழக்கமாக இந்த ஃபார்முலாவை பாஜகதான் செய்யும். அதைத் தொடர்ந்துதான் பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குச் சரியான சவாலாக இந்தியா கூட்டணிக் கட்சியின் கூட்டம் அமைந்துள்ளது. இது வியூகம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பல விசயங்களை புட்டு புட்டு வைத்துள்ளார்.

lok sabha election 2024 NDA alliance

இந்தியா கூட்டணி கூட்டம் பற்றி ஷ்யாம், "கடந்த 2014இல் மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்றது. கடைசிக் கட்டத் தேர்தலில் 41 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கடைசி நாளில் சிவாஜி கோட்டைக்கு மோடி பயணம் மேற்கொண்டார்.
அது வெற்றியின் அடையாளமாக அந்தப் பயணத்தை அவர் செய்தார். 2019இல் 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது அவர் கேதார்நாத் குகையில் தியானம் செய்தார். இந்த 59 தொகுதிகளில் பாஜக 30 தொகுதிகளை வென்றது.

அதனைத் தொடர்ந்துதான் கன்னியாகுமரி பாறையில் மோடி தியானம் செய்யப் போவதாகத் தகவல்கள் வருகின்றன.

2024இல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளில் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் வழக்கம் போல தன் பக்கம் கவனம் இருக்க வேண்டும் என மோடி விரும்புகிறார். இது பாஜகவின் வழக்கமான யுக்திதான்.

இதைப்போன்ற ஒரு வியூகங்களை எதிர்க்கட்சிகள் வகுக்கவில்லை. அது அவர்களின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக இருந்தது. ஆகவே, தலைப்புச் செய்தியில் மோடி மட்டும்தான் இருந்தார்.

ஆனால், இந்த முறை எதிர்க்கட்சிகள் தலைப்புச் செய்தியில் தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகின்றன. ஆகவேதான் ஜூன் 1 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா கூட்டணியில் சலசலப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வருவதைத் தடுக்கவும் நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்பதை உணர்த்தவும் இந்தக் கூட்டம் அவர்களுக்கு உதவும்.

இதில் சிக்கல் என்னவென்றால், பாஜக கடந்த 3 தேர்தல்களிலும் ஒரே மாதிரியான யுக்திகளைக் கடைப்பிடித்து வருகிறது. முதலில் செய்தபோது அதன் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. தொடர்ந்து ஒரே மாதிரியாகச் செய்யும் போது, அதன் மீதான ஈர்ப்பு குறைந்து போய் விட்டது. இதையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.

lok sabha election 2024 NDA alliance

2019இல் காங்கிரஸ் மிகக் கடுமையான தோல்வியைச் சந்தித்து. அப்போது தலைப்புச் செய்திகளில் காங்கிரஸ் இடம்பெறவே இல்லை. அத்துடன் ஒப்பிடும்போது 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் ஒரு தலைப்புச் செய்தியாக மாறும். அது பாஜகவுக்கும் மோடிக்கும் ஒரு போட்டியை ஏற்படுத்தும். அந்த வியூகத்தைக் காங்கிரஸ் இந்த முறை செய்திருப்பது அவர்கள் கூட்டணிக்கு ஒரு பலமாக அமையும்.

2014 சிவாஜி கோட்டைக்குப் போன மோடி 2019இல் கேதார்நாத் குகைக்குப் போனார். இப்போது கன்னியாகுமரி பாறையில் தியானம் செய்ய மோடி விவேகானந்தர் போல் உடை அணிந்து செல்வார் என்கிறார்கள்.

பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை உபி, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் முன்பைவிட குறைந்த அளவு தொகுதிகளில்தான் வெற்றி பெறுவார்கள் என்று தொடர்ந்து கருத்துக் கணிப்புகள் வருகின்றன.

அதைச் சமாளிக்க மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் 'இந்தியா' கூட்டணியில் வலிமை இல்லை. வருடத்திற்கு ஒரு பிரதமர்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அடிக்கடி பேசி வருகிறார்கள். அதைச் சமாளிக்கவும் பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கவும் இந்த 'இந்தியா' கூட்டணி கூட்டம் கைகொடுக்கும்.

மேலும் நாங்கள் ஒற்றையாக உள்ளோம் என்பதை மக்களுக்கு ஒரு குறியீடு மூலம் உணர்த்தவே இந்தக் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தை 'இந்தியா' கூட்டணி ஒருங்கிணைத்துள்ளது.

அது சரியான வியூகம் தான். இந்த முயற்சி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு அன்று பாஜகவின் தலைப்புச் செய்தியைக் கொஞ்சம் திசை திருப்பும். அதுவே அவர்களுக்கு இலாபம்தான்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+