இது லிஸ்டுலேயே இல்லையே.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் சொன்ன "நோ"? முதல்முறையாக இப்படி? என்னாச்சு?
சென்னை: லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தலில் முக்கியமான இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான பிரச்சாரம் ஒன்றிற்கு நோ சொன்னதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலின் இரண்டாம் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கேரளாவில் 20 தொகுதி உள்ள நிலையில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது.

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவை தவிர கர்நாடகாவில் 18 தொகுதி, ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
பீகார், அசாமில் தலா 5 தொகுதிகள், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தலா 3 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 88 தொகுதகிளில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஸ்டாலின் நோ: லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தலில் முக்கியமான இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான பிரச்சாரம் ஒன்றிற்கு நோ சொன்னதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில்,'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் முதலில் கேரளாவில் அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. சிபிஎம் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வதாக இருந்தது. அதே சமயம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்காக வயநாட்டில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ராகுல் காந்திக்காக வயநாட்டில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலினிடம் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் ஸ்டாலின் இந்த பிரச்சாரத்திற்கு நோ சொன்னதாக கூறப்படுகிறது.
என்ன காரணம்: இந்தியா கூட்டணியில் சிபிஎம், சிபிஐ - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
ராகுல் காந்தி சமீபத்தில் கேரளாவில் பேசுகையில், கேரள முதல்வரை ஏன் பாஜக விமர்சனம் செய்வது இல்லை. அவரை ஏன் பாஜகவின் ஈடி, சிபிஐ கைது செய்வது இல்லை என்று விமர்சனம் வைத்தார். சிபிஎம் தேசிய அளவில் இந்திய கூட்டணியில் இருந்தாலும் கேரளாவில் இல்லை. அப்படி இருக்க கேரளாவில் பினராயி விஜயனை ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
இதற்கு பினராயி.. உங்களை பாஜக பப்பு என்று கூறுவதை நீங்கள் இப்போது நிரூபிக்கிறீர்கள். உங்கள் பாட்டியே எங்களை கைது செய்த கதை எல்லாம் உங்களுக்கு தெரியுமா? அப்போதே மண்டி போடாதவர்கள் நாங்கள் நீங்கள் எம்மாத்திரம் என்று விமர்சனம் செய்தார்.
இந்த மோதல் காரணமாக சிபிஎம் - காங்கிரஸ் இடையே அங்கே கடுமையான கருத்து வேறுபாடு இல்லை. ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதை சிபிஎம் கட்சியும் விரும்பவில்லை. இப்படிப்பட்ட நிலையில் ராகுல்காந்திக்கு ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதை விரும்பவில்லை.. தேவையில்லாத பிரச்சனை , கருத்து வேறுபாடு வரும் என்பதால் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications