அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, புதிய பாரதம் தவிர வேறு எந்த கட்சிகள் இருக்கு? ஓவைசி கட்சி இணையுமா?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. அதிமுகவும் தம் பங்குக்கு இன்று தேர்தல் பங்கீட்டு குழு உள்ளிட்டவைகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. திமுக அணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, தவாக ஆகியவை இடம் பெற்றுள்ளன.

அதிமுக, பாஜக கூட்டணிகள்: அதிமுக கூட்டணியில் தற்போது வரை எஸ்டிபிஐ, புதிய பாரதம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவை உறுதியான பிடித்துவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த கூட்டணிக்கு போவது? என இருதலை கொள்ளி எறும்புகளாக தத்தளித்து கொண்டிருப்பவை டாக்டர் ராமதாஸின் பாமக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்டவை.
பாமக, ஜிகே வாசனின் தமாகா: பாமகவைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்குதான் போகும் என கூறப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் நிறைய கட்சிகல் இருப்பதால் சொற்ப இடங்கள்தான் கிடைக்கும் என்கிற நிலைமை. இதனையடுத்து பாஜக, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது பாமக. இதில் தற்போதைய தகவலின் படி, பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைவது; மத்திய அமைச்சர் பதவியை கேட்டுப் பெறுவது என்பது அதன் நிலைப்பாடு என கூறப்படுகிறது. இதே நிலைப்பாட்டில்தான் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸும்.
புதிய தமிழகம்: புதிய தமிழகம் கட்சியானது அண்மைய நாட்கள் வரை அதிமுக கூட்டணிக்குதான் போகும் நிலைமையில் இருந்தது. பாஜக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் அதிமுக பக்கம் தாவும் முடிவில் இருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் அவரது மகன் டாக்டர் ஷ்யாம், பாஜக கூட்டணியிலேயே நீடிப்போம்; ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு வாங்குவோம் என நெருக்கடி கொடுத்ததாகவும் அதனால் பாஜக கூட்டணியிலேயே புதிய தமிழகமும் நீடிக்கும் நிலைமை உள்ளது.
தேமுதிக எங்கே தாவும்?: தேமுதிகவும் அங்கிட்டு ஒரு கால், இங்கிட்டு ஒரு கால் என்பதைப் போல வழக்கம் போல அதிமுக, பாஜக என இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஒரு பக்கம், பாஜகவுடன் இணைந்தால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற நப்பாசை பிரேமலதாவுக்கும் இருக்கிறது. அண்ணா திமுக கூட்டணிக்கு போனால் தேர்தல் செல்வை பார்த்து கொள்வார்களே என்கிற தைரியமும் இருக்கிறது. இதனால் எந்த கூட்டணி என்பது முடிவு செய்யாமல் ஊசலாடுகிறது தேமுதிக.
ஓவைசி கட்சி?: ஆக தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி குடித்து முடிவெடுக்காமல் பாஜக பக்கம் போகாத ஒரே ஒரு அறியப்ப்ட்ட கட்சியாக இருப்பது ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி. தமிழ்நாட்டின் இக்கட்சிக்கு எந்த செல்வாக்கும் கிடையாது என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லி இருக்கின்றன. சட்டசபை தேர்தலில் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைத்தது மஜ்லிஸ் கட்சி. ஆனால் ஒன்றும் தேறவில்லை. அதிமுகவுன் கூட்டணி சேர வாய்ப்புள்ள கட்சியாக, புதிய பாரதம்- எஸ்டிபிஐயை தொடர்து ஓவைசி கட்சி மட்டுமே இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications