"மொழி அரசியலால்" முடங்கிப் போனதாம் தமிழ்.. இட்லி, தோசையுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி விமர்சனம்!
சென்னை: மொழி அரசியலில் தமிழ்நாட்டுக்குள்ளேயே தமிழ் மொழி முடங்கி இருக்கிறது; இதனால் தமிழ் மொழிக்குதான் பாதிப்பு; இந்தியாவுக்குதான் பாதிப்பு என விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்து கூறியதாவது: தமிழ்நாட்டைப் பற்றி சொல்லும் போது மொழியைப் பற்றி முதலில் பேச வேண்டும். மிகப் பெரிய பாரம்பரியமான தமிழ் மொழிக்கு நாம் அநியாயம் செய்து கொண்டே இருக்கிறோம்.

இந்தியாவில் ஒரு டைனோசர் முட்டை கிடைத்தால் ஒட்டுமொத்த நாடும் கொண்டாடுகிறது. ஆனால் உலகிலேயே பழமையான தமிழ் மொழியை நாம் கொண்டாடவே இல்லை. இந்த உலகத்திடம் நம் பெருமையை சொல்லவே இல்லை. எனக்கு இது மிகப் பெரும் வலியாகவே இருக்கிறது. இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையிலும் தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி பேசினேன்.
நாட்டில் மொழி அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. நல்லவேளையாக இட்லி, தோசையை வைத்து அரசியல் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் தமிழ்நாட்டுடன் இட்லி, தோசையையும் முடக்கி இருப்பார்கள்.
இன்றைக்கு இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் இட்லி, தோசை கிடைக்கிறது. ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரிலும் இட்லி தோசை கிடைக்கிறது. குஜராத்திலும் இட்லி, தோசை சாப்பிட முடியும். உலகம் முழுவதுமே இட்லி, தோசை பரவித்தான் இருக்கிறது.
இட்லி, தோசை உலகம் முழுவதும் பரவி இருப்பது போல தமிழ் மொழியும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களால் தமிழ் மொழியை ஒரு பிராந்தியத்துக்குள் முடக்கி வைத்துள்ளனர். இது தமிழ் மொழிக்கு பெரும் பாதிப்பைத் தரும். இந்தியாவுக்கும் இது பாதிப்பு. இந்தியாவுக்கும் இது இழப்பு.
காசிக்கு தமிழ்நாட்டில் இருந்துதான் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதனால்தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் ஒரு இருக்கை உருவாக்கப்பட்டது. காசி தமிழ் சங்கமம் மூலம் நாட்டின் ஒற்றுமையை வலுப்பௌத்தவும் முடிந்தது.
நாடு விடுதலை அடைந்த போது நேருவிடம் செங்கோல் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டு ஆதீனங்கள் கொடுத்த செங்கோல் புறக்கணிக்கப்பட்டது. இதனால்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவினோம். தமிழ்நாட்டு தலைவர்களே இதனைப் புறக்கணித்தது என்பது துரதிருஷ்டமானது. தமிழ்நாட்டு தலைவர்களே தமிழ் பாரம்பரியம், வரலாறு மீது பெருமை கொள்ளவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications