சென்னையில் பிரம்மாண்ட ரோடு ஷோ- பிரதமர் மோடி ஏப்.6-ல் 6-வது முறையாக தமிழகம் வருகை!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி வரும் 9-ந் தேதி சென்னை வருகிறார். லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி 6-வது முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார்.
லோக்சபா தேர்தல் களம் தமிழ்நாட்டில் அனல் பறக்கிறது. தமிழ்நாடு, புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 முறை பிரசாரம் செய்துள்ளார். கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். கோவையில் பிரம்மாண்ட ரோடு ஷோ பிரசாரத்தையும் மோடி மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு 6-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். சென்னையில் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கான ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் உள்ளிட்டோரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். மேலும் வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் சென்னை வருகை குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications