‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 29 தொகுதிகளில் உறுதியாக ஜெயிக்கும் என்று தந்தி டிவி கருத்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளின் விபரம் வருமாறு:
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்க வருகிறது.
இந்நிலையில் தான்தமிழக லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி சார்பில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் மீண்டும் திமுக கூட்டணி கட்சிகள் தான் அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி திமுக கூட்டணி என்பது 34 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 29 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறும் எனவும் 5 தொகுதிகளில் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெறும் 29 தொகுதிகள் என்னென்ன என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
தமிழ்நாட்டில் திமுக வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் களமிறங்கி உள்ளன. இதில் தூத்துக்குடி, நீலகிரி, பெரம்பலூர், நாமக்கல், தர்மபுரி, வடசென்னை, மத்திய சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம், ஆரணி, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், தென்காசி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 16 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் (புதுச்சேரியை சேர்த்தால் 10 தொகுதி)வழங்கப்பட்டுள்ளது. அதில் விருதுநகர், கடலூர், கரூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி, ஆகிய 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி எளிதாக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெறுவார்கள். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக வழங்கிய உள்ள திண்டுக்கல் (சச்சிதானந்தம்), மதுரை (சு வெங்கடேசன்)தொகுதியில் அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் தொகுதியிலும் வேட்பாளர் வி. செல்வராஜ், திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் ஆகியோர் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 29 தொகுதிகள் தான் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் எளிதாக வெற்றி பெறும் தொகுதிகளாகும். மேலும் ஈரோடு, திருச்சி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் கடும் போட்டி நிலவும். இருப்பினும் இறுதியில் திமுக வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை சேர்த்தால் திமுக 34 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் வேலூர், கோவை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த 5 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு என்பது கடைசியில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதில் வேலூரில் திமுக கதிர் ஆனந்த் மற்றும் பாஜக கூட்டணி ஏசி சண்முகத்துக்கும், திருநெல்வேலியில் பாஜக நயினார் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஷ் இடையேயும் கடும் போட்டி இருக்கும்.
கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை இடையேயும், கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் குமரகுரு மற்றும் திமுக வேட்பாளர் மலையரசன் இடையேயும், பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இடையேயும் கடும் போட்டி இருக்கும். இந்த தொகுதகிளின் ரிசல்ட் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர், கோவை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி தொகுதிகள் கடும் இழுபறி தொகுதிகளாக தந்தி டிவி கருத்து கணிப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications