அண்ணாமலையை தூக்கி அடிச்சாதான்... பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுக முன்வைக்கும் ஒற்றை நிபந்தனை?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி குறித்து பரிசீலனை செய்வோம் என்பதுதான் டெல்லி மேலிடத்துக்கு அதிமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஒற்றை நிபந்தனை என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சியுடனான அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவோ அதிமுகவின் தயவில்தான் உள்ளது. அதனால்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என பிரகடனம் செய்யவும் முடிகிறது அக்கட்சியின் தலைவர்களால்.

அதிமுக மீது சரமாரி விமர்சனம்: அண்ணா திமுக, சக கூட்டணி கட்சி என்று அண்ணாமலை எப்போதும் பார்ப்பது இல்லை என்பது அக்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு. திமுகவை எப்படி எதிர்க்கிறாரோ அதேபோல அண்ணா திமுகவை சரிக்கு சமமான தட்டில் வைத்து அண்ணாமலை கடுமையாக எதிர்க்கிறார். இதனை அதிமுக தலைவர்கள் இப்போதும் எப்போதும் ரசித்தது இல்லை.
அதிமுகவின் அதிரடி பதிலடி: இதனால்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல்பேர்வழி என அண்ணாமலை விமர்சித்தார். அப்போதும் அதிமுக தொண்டர்கள் மிக கடுமையான கோபத்தைக் காட்டினர். அண்ணாமலைக்கு எதிரான போராட்டங்களை நடத்தினர். இப்போது பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் என திராவிட இயக்கத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார் அண்ணாமலை. இனிமேலும் இந்த கூட்டணி தொடராது என்பதையே இதற்குப் பதிலடியாக கொடுத்திருக்கிறது அதிமுக.

அண்ணாமலையை மாற்றுங்க.. : இத்தனைக்கும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டு திரும்பிய நிலையில் அதிமுக -பாஜக கூட்டணி முறிந்துள்ளது. அண்ணா திமுகவைப் பொறுத்தவரை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தூக்கி அடிக்க வேண்டும்; அதிமுகவுடன் இணைந்து செயல்படக் கூடிய ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்பதுதான் ஒற்றை கோரிக்கையாக தெரிகிறது.

டெல்லி சந்திப்பில் வலியுறுத்தல்?: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட, "மேலிடம் வரை சொல்லிப் பார்த்தும் மேலிடம் கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலை தொடர்ந்து இப்படி பேசுகிறார்" என ஆதங்கத்தை கொட்டியிருந்தார். அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் அண்ணாமலையை மாற்ற சொல்லி வலியுறுத்தி இருக்கலாம் என்பதையே ஜெயக்குமாரின் இந்த பேட்டி வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் டெல்லி மேலிடமோ அதிமுகவுக்கு சாதகமான பதிலைத் தரவில்லை போல.. அதனால்தான் இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இந்த களேபரங்களுக்கு பின்னராவது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் டெல்லி மேலிடம் என்பது அதிமுகவின் எதிர்பார்ப்பு.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்!












Click it and Unblock the Notifications