சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. மே மாதமா? ஏப்ரலிலா? தமிழகத்தில் எப்போது தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

லோக்சபா தேர்தல் இந்த வருடம் மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரத்தில் சூடு கூடிக்கொண்டே செல்கிறது.

லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் முழுதாக 4 மாதங்கள் இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் முன்கூட்டியே நடக்க உள்ளதாகவும், இதற்கான பணிகளை அரசு செய்து வருவதாகவும் தகவல்கள் வருகிறது.

இரண்டு கட்டம்

இரண்டு கட்டம்

இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இரண்டாம் கட்டமாக மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும். பின் மே இறுதியில் தேர்தல் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

கேட்கும்

கேட்கும்

இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்திற்கு லோக்சபா தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் கூற உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக தமிழக அரசு தேர்தல் ஆணையத்துடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளது.

வெயில்

வெயில்

பொதுவாக மே மாதம் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். இந்த வருடம் அதிக குளிர் காரணமாக மே மாதத்தில் வெயில் மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதை காரணம் காட்டி தேர்தலை முன்கூட்டியே நடத்த அரசு முயல்வதாக தெரிகிறது. அதேபோல் மாணவர்களின் தேர்வும் மார்ச் மாதத்தில் முடியும் என்பதால் அரசு ஏப்ரல் மாதத்தை திட்டமிட்டுள்ளது.

கேட்கும்

கேட்கும்

தமிழகத்தில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளுக்கான தேர்தலும் இதனுடன் நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனால் ஏப்ரல் மாதம் தமிழகம் பெரிய பரபரப்பாக இருக்கும் என்கிறார்கள். பொதுவாக லோக்சபா தேர்தல் தமிழகத்தில் மே மாதமே நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lok Sabha Elections 2019 may be held in Tamilnadu by this April as per sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X