சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட அது உண்மை இல்லை.. கெஸ் பண்ணி சொன்னது.. எச்.ராஜா கொடுக்கும் விளக்கத்தை பாருங்க!

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அவசரமாக வெளியிட்ட பின், அது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வித்தியாசமான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா- வீடியோ

    சென்னை: பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அவசரமாக வெளியிட்ட பின், அது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வித்தியாசமான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

    கடந்த ஒருவாரமாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போய்கொண்டு இருக்கிறது. இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். தலைமை அறிவிக்கும் முன் அவசரமாக அவர் பட்டியலை வெளியிட்டார்.

    அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா? அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா?

    பட்டியல் விவரம்

    பட்டியல் விவரம்

    அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார், கன்னியாகுமரியில் எம்.பி பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிடுகிறார் என்று கூறினார்.

    என்ன பரபரப்பு

    என்ன பரபரப்பு

    இது பாஜகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஐந்து பேர்தான் போட்டியிடுகிறார்களா என்று பலரும் இணையத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். சிலர் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை டேக் செய்து கூட பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து கேள்விகளை எழுப்பினார்.

    இன்னொரு டிவிட்

    ஆனால் எச்.ராஜா பட்டியலை வெளியிட்ட சில நிமிடத்தில் இன்னொரு டிவிட் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசனிடம் இருந்து வந்தது. அதில், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற உழைப்போம்., என்று குறிப்பிட்டு இருந்தார். கோவை வேட்பாளரை தலைமை அறிவிக்கும் முன்பே இவரே வேகமாக அறிவித்து இருக்கிறார்.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இந்த நிலையில் இந்த வேட்பாளர் பட்டியல் குறித்து தற்போது எச்.ராஜா விளக்கம் அளித்து உள்ளார். அதில், நான் வெளியிட்ட பட்டியல் அதிகாரப்பூர்வ பட்டியல் கிடையாது. இது யுகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டியல். அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும், என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    English summary
    Lok Sabha Elections 2019: No It is not an official list, says BJP National Sec H Raja on BJP's candidates' list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X