கெஜ்ரிவாலிடம் ஸ்டாலின் சொன்ன பிளான்.. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவர்தான்? அப்படியா?
சென்னை: அரவிந்த் கெஜ்ரிவால் வருகை லோக்சபா தேர்தல் களத்தையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையத்தில் ஆம் ஆத்மி நிர்வாகி வசீகரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
50 நாட்கள் சிறையில் இருந்தபின், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் சிறையில் வெளியே வந்துள்ளார். கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் இரண்டு மாநிலங்கள் டெல்லி மற்றும் பஞ்சாப். இங்கு இருபது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு - முறையே மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்டமாக தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல்களுக்கான பிரச்சாரங்களை கெஜ்ரிவால் தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.

அமலாக்கதுறை கெஜ்ரிவாலை மார்ச் 21 அன்று கைது செய்தது. பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் கடைசி நாளான ஜூன் 1 ஆம் தேதி வரை தற்போது அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும். அரவிந்த் கெஜ்ரிவால் வருகை லோக்சபா தேர்தல் களத்தையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையத்தில் ஆம் ஆத்மி நிர்வாகி வசீகரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், கெஜ்ரிவால் மீது தவறான குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எப்போதோ போடப்பட்ட வழக்கில், அதுவும் பெயர் இல்லாத வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை சேர்த்துள்ளனர். தேர்தல் நடக்கும் நேரத்தில் அவசர அவசரமாக அவரை கைது செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் எதுவும் செய்துவிட கூடாது. பிரச்சாரம் செய்ய கூடாது என்று இப்படி செய்துள்ளனர்.
இந்தி பெல்ட்டில் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய கூடாது என்பதால் அப்படி செய்துள்ளனர். இந்தி பெல்ட்டில் கெஜ்ரிவால் வளர்ந்து வருகிறார். வேகமாக வளர்ந்து வருகிறார். மோடியின் கோட்டை குஜராத்திலேயே 12 சதவிகித வாக்குகளை கெஜ்ரிவால் பெற்றுள்ளார். இப்படி எல்லாம் கெஜ்ரிவால் வளர்ந்து வருகிறார். அதனால்தான் அவரை கைது செய்து உள்ளனர். ஆனால் இப்போது நீதிமன்ற வழியாக அவர் வெளியே வந்துள்ளார்.
மோடி குழப்பம்: மோடி குழம்பி போய் இருக்கிறார். இதனால்தான் மோடி புலம்பி வருகிறார். கடுமையாக புலம்பி வருகிறார். மோடியால் பேச எதுவும் இல்லை. இந்து முஸ்லீம் பிரிவினை பற்றி பேசுகிறார். ஆடு மாடு என்று பேசுகிறார். இப்படி பல விஷயங்களை பேசுகிறார். தாலியை பிரிப்பார்கள் என்று கூறுகிறார். பாகிஸ்தான் பற்றி பேசுகிறார். இதே மாவை அரைத்துக்கொண்டு இருக்கிறார். அதனால்தான் மோடி பதற்றத்தில் இருக்கிறார். இப்படி அச்சத்தில்தான் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர்.
பாஜகவில் பிரதமருக்கு ஆள் இல்லை. இந்தியா கூட்டணியில் பலர் உள்ளனர். ஆனாலும் நாங்கள் ஒற்றுமையாக உள்ளனர். நாங்கள் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்வோம். மோடிக்கு 75 வயதாகிவிட்டது. அவர் பாஜக விதிப்படி ரிட்டயர் ஆக வேண்டும். அதுதான் அவர்கள் விதி. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லையே. மோடி இல்லையென்றால் அது கட்சியே இல்லை.
கெஜ்ரிவாலை பார்த்து பாஜக அரண்டு போய் உள்ளது. இதற்காகத்தான் மோடி இந்தியா முழுக்க சுற்றி வருகிறார். மோடி இந்தியா மொத்தமும் சுற்றிக்கொண்டு இருக்கிறார். மோடி ஆசைக்காக நாங்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டியது இல்லை. தேர்தலுக்கு பின் அறிவிப்போம். எங்கள் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாங்கள் ஒற்றுமையாக ஆட்சி நடத்துவோம்.
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தை டெல்லியில் நடத்த கெஜ்ரிவாலிடம் ஸ்டாலின் அழைத்ததாக கூறப்பட்டது. எனக்கு அது பற்றி தகவல்கள் வரவில்லை. ஏற்கனவே பல மாநிலங்களில் கூட்டம் நடந்தது. ஸ்டாலின் இதற்காக கெஜ்ரிவாலிடம் கேட்டு இருந்தால் சரிதான். டெல்லியில் கூட்டம் நடத்த வேண்டும் என்று திட்டம் போட்டு இருந்தால் சரிதான். ஆனால் எனக்கு தெரியவில்லை, பார்க்கலாம் கூட்டம் நடக்கிறதா என்று பார்க்கலாம், என்று வசீகரன் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications