அண்ணாமலைக்கு டெல்லி வைக்கப் போகும் ஆப்பு? ஜிகே வாசனிடம் எடப்பாடி கொடுத்த அதிர்ச்சி புகார் பட்டியல்!
சென்னை: அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை திடீரென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சந்தித்ததே டெல்லி பாஜக தலைமையின் உத்தரவுதான் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அதிமுக, பாஜக இணைந்து நின்றிருந்தன. ஆனால் அண்ணா திமுகவை இடைவிடாமல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சீண்டிக் கொண்டே இருந்தார். இதுதான் வாய்ப்பு என பாஜகவுடனான கூட்டணியையே அண்ணா திமுக முறித்துக் கொண்டது.

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்தது நாடகம்தான் என இப்போதும் திமுக அணி சொல்லி வருகிறது. ஆனால் முடிந்தது முடிந்ததுதான்..பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதனால் திமுகவுக்கு எதிரான அணி என்பது சிதறிப் போயுள்ளது. தற்போது அதிமுக அணியில் இணைவதா? பாஜக பக்கம் போவதா? என்பதில் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் திணறிக் கொண்டே இருக்கின்றன.
இந்த பின்னணியில்தான் திடீரென எடப்பாடி பழனிசாமியை ஜிகே வாசன் சந்தித்து பேசினார். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எந்த ஒரு கட்சியுமே வரவில்லையே என்கிற விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஜிகே வாசனின் இந்த சந்திப்பு, அதிமுகவுடனான கூட்டணிக்குதான் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் தமாகா வட்டாரங்களோ, ஜிகே வாசனை அனுப்பியதே டெல்லி பாஜக தலைமைதான். தமிழ்நாடு தொடர்பான புலனாய்வுத் துறை அறிக்கைகளும் கருத்து கணிப்புகளும் திமுக கூட்டணிக்குதான் வெற்றி வாய்ப்பு என்பதை உறுதி செய்கின்றன. இதனை தடுக்க தற்போதைய ஒரே வழி மீண்டும் திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதுதான் என நினைக்கிறதாம் டெல்லி. இதனால்தான் ஜிகே வாசனை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வெள்ளோட்டம் விட்டு பார்த்ததாம் டெல்லி தலைமை என்கின்றன.
ஜிகே வாசனுடனான சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியும் எந்த ஒரு உறுதியையுமே தரவில்லையாம். பாஜகவுடனான கூட்டணியை முறிக்க என்ன காரணம் என ஒரு பட்டியலையே வாசித்தாராம் எடப்பாடியார். அதில் அண்ணாமலையின் பல்வேறு செயல்பாடுகள், சட்டசபை தேர்தலில் பாஜகவின் அண்ணாமலையே முதல்வர் வேட்பாளர் என அறிவிக்க அண்ணா திமுகவினரையே மிரட்டிக் கொண்டிருந்தது உள்ளிட்ட விவகாரங்கள் அடங்கி இருந்ததாம். இதனை அப்படியே டெல்லிக்கு பாஸ் செய்து விட்டார் எங்கள் தலைவர் என்கின்றன தமாகா வட்டாரங்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்!












Click it and Unblock the Notifications