அட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக!
திமுக கட்சி தொண்டர்கள் இப்போதே சென்னையில் உள்ள திமுக அலுவலகத்தில் அலங்காரங்கள் செய்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: திமுக கட்சி தொண்டர்கள் இப்போதே சென்னையில் உள்ள திமுக அலுவலகத்தில் அலங்காரங்கள் செய்து வருகிறார்கள். தேர்தல் வெற்றியை கொண்டாட தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் தமிழகத்தில் 22 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது.

வாய்ப்பு
இந்தநிலையில் தமிழகத்தில் திமுகவிற்கே அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் பெரிய நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
|
அலங்காரம் செய்தனர்
இதையடுத்து தற்போது சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். அறிவாலயத்தை திமுக தொண்டர்கள் அதிகாலையில் இருந்து அலங்காரம் செய்து வருகிறார்கள்.

வீடு
அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் வீடு முன்பும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு முன்பும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இப்போதே அங்கு தொண்டர்கள் குவிய தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில்திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுக்க
சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுக்க பல்வேறு திமுக அலுவலகங்களில் இதே போல் வெற்றியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களை வென்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனால் திமுகவினர் இப்போதே படு குஷியில் இருக்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications