தமிழ்நாடு, புதுவை: 40 தொகுதிகளையும் சுனாமி போல வாரி சுருட்டும் திமுக அணி: Democracy Times பரபர சர்வே
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையுமே திமுக கூட்டணி கைப்பற்றும் என்று Democracy Times கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல்களைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக கூட்டணி ஆகியவை உறுதியாக களத்தில் நிற்கின்றன. இந்த கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள்தான் மாறி மாறி வலம் வர வாய்ப்புள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி தொடர்பான பெரும்பாலான லோக்சபா தேர்தல் கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு சிங்கிள் டிஜிட் இடங்களும் பாஜகவுக்கு அதிகபட்சமாக ஒரு தொகுதியும் கிடைக்கலாம் என்பதுதான் இக்கருத்து கணிப்பு முடிவுகள்.
Times Now- ETG Research நடத்திய கருத்து கணிப்பில், திமுக கூட்டணி- 30 முதல் 34 இடங்கள்; திமுக 20 முதல் 24 இடங்கள்; காங்கிரஸ் 9 முதல் 11 இடங்கள்; அதிமுக 4 முதல் 8 இடங்கள்; பாஜக 0 முதல் 1 என தெரிவித்திருந்தது. இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் (India TV-CNX) கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 28 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வரிசையில் தற்போது Democracy Times லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையுமே திமுக தலைமையிலான கூட்டணிதான் அள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணிக்கு 48% வாக்குகளும் அதிமுக கூட்டணிக்கு 23% வாக்குகளும் கிடைக்குமாம். பாஜகவுக்கு 7% வாக்குகள் கிடைக்கும் என்கிறது Democracy Times கருத்து கணிப்பு.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications