ஆஹா வந்துட்டார்ல... அதிமுக மெகா கூட்டணிக்கு ஒரு சிக்ஸர் என ட்வீட் போட்டு கொண்டாடிய வைகை செல்வன்!
சென்னை: "திமுக கூட்டணியில் இருந்து ஒரு விக்கெட் ,எடப்பாடி - ரவி பச்சமுத்து சந்திப்பு ,மெகா கூட்டணிக்கு 'ஒரு சிக்ஸர் ' இதுதான் அதிமுகவின் வைகை செல்வன் போட்ட ட்வீட். இதனைத்தான் அக்கட்சியினர் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ரவி பச்சமுத்து யாருங்க? பச்சமுத்து யாருங்க? என்றெல்லாம் குழம்ப வேண்டாம்.. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதியில் வென்றவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து. இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர். தமிழகத்தின் பேசுபொருளான எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் தலைவர்; முன்னணி தமிழ் டிவி சேனலின் உரிமையாளர்.
2019 லோக்சபா தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றவராக இருந்தாலும் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே திமுகவுடன் முறைத்துக் கொண்டார். இதனால் திமுகவுடான உறவும் முறிவுக்கு வந்த நிலையில்தான் இருந்தது. திமுகவின் அத்தனை கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி அவ்வப்போது சலசலப்பை கிளப்பி வந்தவர்தான் பச்சமுத்து என்ற பாரிவேந்தர். அத்துடன் பாஜக பக்கம் தமது பாசப் பார்வையை திருப்பிக் வந்தார் பாரிவேந்தர்.

போக கடாத இடம் என திமுக மீது விமர்சனம்
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாரிவேந்தர், பாஜக கூட்டணியில் 2.40 லட்சம் வாக்குகள் பெற்று வென்றேன். திமுக கூட்டணிக்கு சென்றேன். நான் போக கூடாத இடத்திற்கு சென்று இருக்க கூடாது. எம்பி பதவி என்பது சிறு அடையாளம்தான். என் அடையாளத்தின் சிறு துளிதான் அது. அதற்காக நான் போக இடத்திற்கு சென்று இருக்க கூடாது என பேசி திமுகவினரை கொந்தளிக்க வைத்தார். இதன் உச்சமாக அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான கள்ளக்குறிச்சி குமரகுருவுடன் சில நிகழ்ச்சிகளில் நெருக்கம் காட்டினார் பாரிவேந்தர்.

திமுக சின்னத்தில் எம்பி
இதனால் திமுக கூட்டணியில் இருந்து பாரிவேந்தரின் இஜக விலகுவது உறுதியாகிவிட்டது. பாரிவேந்தரைப் பொறுத்தவரை 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கள்ளக்குறிச்சி தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு அத்தொகுதி ஒதுக்கீடானது. இதனால் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு போராடி ஜெயித்தார் பாரிவேந்தர்.

பாரிவேந்தர் வியூகம்
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகன் ரவி பச்சமுவை களமிறக்க விரும்புகிறாராம் பாரிவேந்தர். எப்படியாவது கள்ளக்குறிச்சி தொகுதியில் அவரை நிற்க வைத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என வியூகம் வகுத்துள்ளாராம். இதனால்தான் பாஜக, அதிமுகவுடன் மிக நெருக்கமாக இருக்கிறாராம். அப்படி மகன் ஜெயித்து, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் மத்திய அமைச்சர் பதவிதான் டார்கெட் எனவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
இந்நிலையில்தான் நாம் மேலே சொன்ன அதாவது திமுக கூட்டணியில் இருந்து ஒரு விக்கெட் ,எடப்பாடி - ரவி பச்சமுத்து சந்திப்பு ,மெகா கூட்டணிக்கு 'ஒரு சிக்ஸர் ' என அக்கட்சியின் வைகை செல்வன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவைத்தான் அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications