உட்கட்சி பூசல், கூட்டணி டமார்.. நெருக்கடியில் தமிழ்நாடு பாஜக- ஜேபி நட்டா மார்ச் 10-ல் வருகை!
பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாடு வருகை தருகிறார்.
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டமாக வெடித்திருக்கிறது. தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதால் கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 10-ந் தேதி பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பாஜக ஐடிவிங்கில் இருந்து நிர்மல் குமார், திலீப் கண்ணன் ஆகியோரும் விலகினர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை மிக கடுமையாக விமர்சித்தே பலரும் வெளியேறி வருகின்றனர்.

மேலும் பாஜகவுடனான கூட்டணியால்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக அல்லாத இதர கட்சிகளுடனான கூட்டணிக்கு அதிமுக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் பாஜகவில் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா வரும் 10-ந் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதம் நடத்த உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜேபி நட்டா பங்கேற்கிறார்.
ஜேபி நட்டாவின் தமிழ்நாடு வருகையின் போது அண்ணாமலைக்கு எதிரான புகார்களை வாசிக்கவும் சில மூத்த நிர்வாகிகள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications