சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள்… காரணம் என்ன ?

Google Oneindia Tamil News

சென்னை : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், புழக்கத்தில் 2,000 நோட்டுக்கள் மறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரமான ஏடிஎம்-மில் பணம் எடுத்தாலும் 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன என்றும், 2,000 ரூபாய் நோட்டுக்களை நிறுத்திவிட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Loksabha elections 2019: No Circulation Of Rs. 2,000 Notes

கடந்த 2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புதிய 2,000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்த போது சில்லறை கிடைக்காமல் வியாபாரிகளும், மக்களும் அலைக்கழிப்புக்கு ஆளாகினர். அதன்பின் 500 ரூபாய் நோட்டு வந்ததும், சில்லரை தட்டுப்பாடு சற்று குறைந்தது.

நடிகை நமீதா காரில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம்நடிகை நமீதா காரில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம்

தேர்தலுக்காக 2,000 ரூபாய் நோட்டுகளை சில முக்கிய கட்சிகள் பதுக்கி விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகத் தான் புழக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுக்கள் திடீரென மாயமாகி உள்ளதாக வங்கி ஊழியர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக புதிய 2,000 நோட்டுக்கள் கொண்டு வரப்பட்ட போதிலும், தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் இருந்து மறைந்திருப்பது பலரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் திருவிழாவின் போது வெளிவராத 2,000 நோட்டுக்கள், இனி எப்போது வெளியாகும் என்பது கேள்விகுறியே என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Loksabha elections 2019: Rs.2,000 notes have disappeared in Circulation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X