என்னை ஒரு தயாரிப்பாளர் ரூ 10 லட்சம் ஏமாத்திட்டாரு! ஒருவேளை டிபனுக்கு! லொள்ளு சபா மனோகர் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை ஒரு தயாரிப்பாளர் ரூ 10 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். நான் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார் லொள்ளுசபா மனோகரன்.

நடிகர் சங்கத்தின் 68 ஆவது பொதுக் குழு கூட்டத்திற்கு வந்திருந்த லொள்ளு சபா மனோகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: நலிந்த கலைஞருக்கு என்ன செய்ய வேண்டும் என நிருபர் கேட்கிறார். அப்படி பார்த்தால் நானும் நலிந்த கலைஞர்தான். இந்த லிஸ்ட்டில் என்னையும் சேர்க்க வேண்டும். நடிகர் சங்கத்திற்கு என் வீட்டிலிருந்து நடந்தே வந்துவிட்டேன்.

lollu sabha manohar nadigar sangam

அவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து ஏதோ டிபன் சாப்பிடுவேன். நடிகர் சங்கத்திற்குள் வந்துவிட்டால் எந்த கவலையும் இருக்காது (கிண்டலாக சொல்லிவிட்டு கண்ணீர் வடித்தார்). எனது கண்ணீர், ஆதங்கம் குறித்து நடிகர் சங்கத்தின் தலைவர்களிடம் நான் முறையிடவில்லை. ஏற்கெனவே முறையிட்ட விஷயங்களே இன்னும் நடைபெறாமல்தான் இருக்கிறது.

தயாரிப்பாளர் ரிஷிராஜ் என்பவர் எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். இதற்காக நடிகர் சங்கத்தில் புகார் அளித்த போது எந்த பலனும் கிடைக்கவில்லை. நீதிமன்றத்திற்கு சென்றேன். அங்கு 4 வருடம் கேஸ் நடந்தது. அங்கும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் வடபழனிக்கும் வீட்டிற்கும் நடந்து கொண்டே இருக்கிறேன். ஆனால் அந்த தயாரிப்பாளர், பைக்கில் வந்து கொண்டுதான் இருக்கிறார். இதை நடிகர் சங்கம் தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு லொள்ளு சபா மனோகர் தெரிவித்தார்.

விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் மனோகர் புகழ்பெற்றதால் லொள்ளு சபா மனோகர் என அழைக்கப்படுகிறார். இவர் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது வாழ்க்கையில் படும் கஷ்டங்களை தெரிவித்துள்ளார். இவருக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 ஆவது பொதுக் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை மற்றும் பல ஊர்களில் இருந்து நடிகர், நடிகைகள், கலைஞர்கள் வந்திருந்தனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி பேசுகையில் நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவது என்ற நிலையில் விலைவாசி உயர்வு காரணமாக நிதிச்சுமை அதிகரித்துள்ளது.

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்பதாக உறுதி கூறியுள்ளனர். நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார். கேரள திரையுலகில் புயலை கிளப்பி வரும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தமிழகத்தில் பாதிப்பு இருக்கும் நிலையில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் என விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+