இனி அவசர வழக்கு மட்டும் விசாரணை.. கொரோனாவால் சென்னை ஹைகோர்ட்டில் அதிரடி கட்டுப்பாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னை ஹைகோர்ட்டில் நாளை(24/03/2020) முதல் 2 அமர்வுகள் (இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு) மற்றும் 5 தனி நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் சென்னைய ஹைகோர்ட்டில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Lots of restrictions in Madras High Court due to Coronavirus attack in TN

அதன்படி சென்னை ஹைகோர்ட்டில் நாளை(24/03/2020) முதல் 2 அமர்வுகள் (இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு) மற்றும் 5 தனி நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள். மிகவும் அவசரமாக விசாரிக்க கூடிய மனுக்களை மட்டுமே வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வழக்காடிகள் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் அழைத்து வர கூடாது. சுழற்சி முறையில் நீதிமன்ற ஊழியர்களை பணியமர்த்த தலைமை பதிவாளருக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்களில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்.

மாவட்ட கீழமை நீதிமன்றங்களிலும் சுழற்சி முறையில் நீதிமன்ற ஊழியர்களை பணியமர்த்த மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.கீழமை நீதிமன்றங்களில் இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிப்பு கேமரா மூலம் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்.

நிர்வாகக் குழுவின் இந்த உத்தரவை உள்ளூர் நிலையின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி முடிவெடுத்து அறிவித்துக் கொள்ளலாம். இந்த நடைமுறைகளை 3 வாரத்திற்கு செயல்படுத்த தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+