சென்னை பெரும்பாக்கத்தில் கள்ளக்காதல் ஜோடி.. தோழிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்.. விரைந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் குடும்பத்தை தவிக்க விட்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்த கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது. முன்னதாக தங்களை 'சேர்ந்து வாழவிட மாட்டார்கள்' என்று அந்த பெண் தனது தோழிக்கு செல்போனில் தெரிவித்து உயிரை மாய்த்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் 5-வது பிளாக்கை சேர்ந்த 23 வயதாகும் செல்பியா மேரிக்கு திருமணமாகி கணவர் மற்றும் 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இதேபோல் செம்மஞ்சேரியை சேர்ந்த 30 வயதாகும் விஜய் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

Chennai crime

இந்தநிலையில் செல்பியா மேரிக்கும், விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால், இருவரையும் குடும்பத்தினர் கடுமையாக கண்டித்தனர்.

இதனால் செல்பியா மேரி, விஜய் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரவர் குடும்பத்தினரை தவிக்க விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினர். மேலும் அதே பகுதியில் செல்பியா மேரி விஜய் ஜோடி, தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் செல்பியா மேரி, தனது தோழி ரேகாவுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் அவர், "என் குடும்பத்தினர் எங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள். அதனால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம்" என கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேகா, உடனடியாக பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் வீட்டின் ஹாலில் விஜய், சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். படுக்கை அறையில் செல்பியா மேரி, புடவையால் தூக்குப்போட்ட நிலையில் உயிரிழந்துகிடந்தார். பெரும்பாக்கம் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை தடுப்பு எண் : தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+